• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சாப்பாட்டு பழக்கங்கள்]

தேநீர் அருந்தும் பழக்கம்

சீனர்களின் தேநீர் குடிக்கும் பழக்கத்திற்கு, 4000 ஆண்டுக்கு கூடுதலான வரலாறு உண்டு. சீனர்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத பானங்களில் தேநீர் முக்கிய இடம்பெறுகிறது. விருந்தினர்களுக்கு தேநீர் வழங்குவது, சீனர்களின் பழக்கமாகும். தேநீரைக் குடித்துக்கொண்டே பேசுவதால், மகிழ்ச்சியான நிலைமை உருவாகிறது.

கி.மு280ம் ஆண்டுக்கு முன், தென் சீனாவில் வூ என்ற சிறிய நாடு இருந்தது. அதன் மன்னர் தமது அமைச்சர்களுக்கு விருந்தளித்த போது, மது குடிக்க விரும்பினார். இதில் வே சேள எனும் அமைச்சரால் அதிகமான மது குடிக்க முடியாது. அவர் மதுவுக்கு பதிலாக தே நீரை குடிப்பதற்கு மன்னர் ஒப்புதல் அளித்தார். அதன் பின்னரே, விருந்தினரை வரவேற்று தே நீர் கொடுக்கும் பழக்கம் துவங்கியது. தாங் வமிசக்காலத்தில், தேநீர் குடிப்பு, மக்களின் பழக்கமாக மாறி விட்டது. இது, புத்த மதத்துடன் தொடர்புடையதாக அறிவிக்கப்பட்டது. 713ம் ஆண்டு முதல் 741ம் ஆண்டு வரை, கோயிலுள்ள குருமார், மூளையை சுறுசுறுப்பாக்க தேநீர் குடிக்க துவங்கினர். அத்துடன், தாங் வமிசகாலத்தின் பணக்கார வீடுகளில், தேநீர் அறை என்று சிறப்பாக கட்டப்பட்டது.

780ம் ஆண்டில், தேயிலையின் நிபுணர் லூ யியு, தேயிலையை விளைவித்து, தயாரித்து, குடிக்கும் அனுபவங்களைத் தொகுத்து ஆராய்ந்து, தேயிலை திருமறை எனும் தேயிலை பற்றய சீனாவின் முதலாவது நூலை எழுதியுள்ளார்.

சீனாவில், தேநீர் குடிப்பது என்பது, தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு பண்பாடாக மாறியுள்ளது. தேநீர் குடிப்பு, ஒரு வகை கலையாக கருதப்பட்டது. நாடெங்கும் பல்வேறு வடிவமான தே நீர் அகங்கள் உள்ளன. பெய்ஜிங்கின் செழுமை மிக்க சியான்மான் சாலையின் பக்கத்தில், சிறந்த தேநீர் கடை இருக்கிறது. மக்கள் இங்கே அமர்ந்து, தே நீர் குடித்து, சிற்றுண்டி சாப்பிடுவதோடு, கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கின்றனர். தென் சீனாவில், அழகான இயற்கை காட்சிக்கு அருகில் தே நீர் கடைகள் உள்ளன. பயணிகள், தேநீர் குடிக்கும் போது, இயற்கை காட்சியைக் கண்டு ரசிக்கலாம்.

சீன மக்கள் அதிகமாக தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். பல்வேறு இடங்களில் வரவேற்கப்படும் தேயிலைகள் வேறுப்பட்டவை. பெய்ஜிங்கை சேர்ந்தவர்கள், மலர் தே நீரை குடிக்க விரும்புகின்றனர். ஷாங்காங்யை சேர்ந்தவர்கள், பச்சை தே நீரை குடிக்க விரும்புகின்றனர். புசியான் மாநிலத்தின் மக்களுக்கு, சிவப்பு தே நீர்ப் பிடிக்கின்றது. சில இடங்களில், தே நீரில் சில பொருட்களை சேர்க்க விரும்புகின்றனர். ஹுநான் மாநிலத்தில், இஞ்சி உப்பு கலந்த தே நீர் கொடுத்து விருந்தினரை வரவேற்கின்றனர். தேநீரில் தேயிலை மட்டுமல்ல, உப்பு, இஞ்சி, எள்ளு ஆகியவையும் சேர்க்கப்படுகின்றன.

பெய்ஜிங்கில், வரவேற்பவர் தேநீரை வழங்கும் போது, விருந்தினர்கள் உடனடியாக இரு கைகளாலும் அதை ஏற்று, நன்றி சொல்கின்றனர். தென் சீனாவின் குவான்துங் மற்றும் குவான்சி மாநிலங்களில், நன்றி தெரிவிக்கும் பொருட்டு, விருந்தினர் வலது கையால் மேசையை மூன்று முறை தட்ட வேண்டும்.

சாப்ஸ்டிகஸ்

உலகெங்கும் உணவு உண்ண மூன்று வழிமுறைகள் உள்ளன. 40 விழுக்காடு மக்கள் கையால் எடுத்துச் சாப்பிடுகின்றனர். 30 விழுக்காடு மக்கள் முள்கரண்டியை பயன்படுத்திக் குத்தி எடுத்துச் சாப்பிடுகின்றனர். 30 விழுக்காடு மக்கள் சாப்ஸ்டிகஸ் என்னும் குச்சிகளைப் பயன்படுத்துகின்றனர்.

சாப்ஸ்டிகஸ், சீனரின் கண்டுபிடிப்பாகும். சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன், யின் மற்றும் சான் வமிச காலத்தில் இது தோன்றியது. பண்டைய ஆவணத்தில் உள்ள பதிவின் படி, அப்போது, சாப்ஸ்டிகஸ், சு அல்லது சியா என்று கூறினர். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகளில், சாப்ஸ்டிகஸ், சியின் என்று அழைக்கப்பட்டது.

பண்டைகாலத்தில் உணவைப் பொரித்து உண்ணும் போது, இரண்டு கிளைகளைப் பயன்படுத்தி பற்றி எடுத்து சாப்பிட்டனர். அதுவே, படிப்படியாக சாப்ஸ்டிகஸாக மாறியது. அதன் வடிவம், இரண்டு குச்சிகளாகும். சீனாவின் சாப்ஸ்டிகஸ், மேல் பகுதி குண்டாகவும், கீழ் பகுதி ஒல்லியாகவும் உள்ளது. இது, சிரமம் இல்லாமல் பற்றி எடுத்துச் சாப்பிட உதவுகிறது.

சாப்ஸ்டிகஸ் எளிதாக இருந்த போதிலும், அதன் மூலப்பொருட்கள் மற்றும் அலங்காரத்தில் சீனர் கவனம் செலுத்துகின்றனர். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன், தந்தம், வெண்கலம் ஆகியவற்றை பயன்படுத்தி சாப்ஸ்டிகஸை தயாரித்தனர். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகளில், மன்னர் மாளிகையிலும், அதிகாரி மற்றும் பணக்கார வீடுகளிலும் தங்கத்தையும் வெள்ளியையும் பயன்படுத்தி, சாப்ஸ்டிகஸ் தயாரிக்கப்பட்டு, பச்சை வர்ணம் பூசி, சாப்ஸ்டிகஸை அலங்காரம் செய்தனர்.

சீன மக்களின் நாட்டுப்புற பழக்கத்தில், சாப்ஸ்டிகஸ், முக்கிய தகுதி பெற்றுள்ளது. சில இடங்களில் திருமணத்தின் போது, மணமகளுக்கு இரண்டு ஜோடி சாப்ஸ்டிகஸ் கண்டிப்பாக மணக்கொடையாக தரப்பட வேண்டும். இது, மணமகனும் மணமகளும் எதிர்காலத்தில் கூட்டாக வாழ்ந்து, வெகுவிரைவாக குழந்தை பெற வேண்டும் என்ற வாழ்த்தைக் காட்டுகின்றது. வட சீனாவின் கிராமங்களில், திருமண நாளன்று, மணமகனும் மணமகளும் இருக்கும் திருமண அறைக்குள் உறவினர்கள் சாசெளப்ஸ்டிகஸை எறிந்து, வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர்.

சீனர்கள் சாப்ஸ்டிகஸ் பயன்படுத்தும் நுட்பம், வெளிநாட்டவரை ஈர்க்கின்றது. மேலை நாடுகளில், சாப்ஸ்டிகஸ் பயன்படுத்தும் முறையைக் கற்பிப்பதற்காகவே தனியாக ஒரு பயிற்சி மையம் நிறவப்பட்டுள்ளது. சீனா, சாப்ஸ்டிகஸின் தாயகமாகும். ஆனால், உலகின் முதாலவது சாப்ஸ்டிகஸ் காட்சியகம், ஜெர்மனியில் அமைக்கப்பட்டது. பல்வேறு நாடுகள் மற்றும் வட்டாரங்களைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கு அதிகமான சாப்ஸ்டிகஸ், அங்கே காட்சி வைக்கப்பட்டுள்ளன.

உணவுப் பழக்கம்

மக்கள் உணவின் அமைப்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சிலருடைய பொருளாதார நிலைமை வசதியாக இல்லா விட்டாலும் அவர்கள் நன்றாக உணவு உண்கின்றனர். பொருளாதார வசதிகளுடன் வாழ்வோர், உணவு கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டியுள்ளது. படிப்படியாக உணவு மக்களுடைய வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் விரிவடைந்துள்ளது. விழா விருந்து பழக்கம், மத நம்பிக்கை உணவுப் பழக்கம், திருமண விருந்து பழக்கம் முதலியவை ஏற்பட்டுள்ளன.

இந்த உணவுப் பழக்கங்கள், முக்கியமாக மக்களிடை பரிமாற்றத்தில் உருவாக்கப்பட்டன.

வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பழக்கம் இருப்பதால், விருந்தின் உணவு வகைகளும் வேறுப்பட்டுகின்றன. பெய்ஜிங்கில், விருந்தினர் நூடுல்ஸை சாப்பிட வேண்டும். இது, விருந்தினர் தங்க வேண்டும் என்ற பொருளாகும். விருந்தினருக்கு தங்களது மகிழ்ச்சியைத் தெரிவிக்க தாம்புலினை சாப்பிட உற்றார் உறவினரையும் நண்பர்களையும் பார்க்க செல்லும் போது, எட்டு வகை சிற்றுண்டிகளை எடுத்துச்செல்ல வேண்டும். தென் சீனாவிலுள்ள சில கிராமங்களில், விருந்தினர் வீட்டுக்கு வரும் போது, முதலில், முட்டை முதலிய சில சிற்றுண்டிகள் உண்ணக் கொடுக்கின்றனர். அதன் பிறகு, உணவுவகைகளைத் தயாரிக்க துவங்குகின்றனர்.

விருந்து பரிமாறும் பழக்கங்கள் இடத்துக்கு இடம் வேறுப்பட்டுள்ளன. பெய்ஜிங்கில், குறைந்தது எட்டு குளிர்ச்சியான உணவுப் பண்டங்களும், எட்டு காரமான உணவுப் பண்டங்களும் சமைக்க வேண்டும். சில இடங்களில், விருந்தில் மீன் கட்டாயம் இடம் பெற வேண்டும். திருமண விருந்து மிகவும் அர்த்தடுடையது. மேற்கு சீனாவிலுள்ள சான்சி மாநிலத்தில் திருமண விருந்தில் ஒவ்வொரு உணவுவகைகளும் ஒரு சிறப்பான அர்த்தம் உண்டு. சியான்சு மாநிலத்தின் கிராமத்தில், திருமண விருந்தில் வறுவல் வாழ்த்துக்கள் என்ற அர்த்தம் இருக்கின்றது.

மருத்துவமும் உணவும்

பண்டை காலத்தில், சீன மக்கள் இயற்கை மூலிகைகளைக் கொண்டு, தனிச்சிறப்பு வாய்ந்த சீனாவின் பாரம்பரிய மருத்துகளை உருவாக்கியுள்ளனர். இது, மக்களின் உணவுடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. மருந்து உணவாகவும், உணவு மருந்தாகவும் மாறுகின்றன.

சேள வமிச காலத்தில் (கி.மு.1046-கி.மு.256), இந்த பாரம்பரியம், மருத்துவ மற்றும் உணவு அமைப்பில் பிரதிபலித்தன. சீனாவின் பண்டைய நூல்களில், இது பற்றிய குறிப்புக்கள் அதிகமாக உள்ளன. தாங் வமிச காலத்தின் புகழ்பெற்ற மருத்துவ அறிஞர் சுன் சிமியேள எழுதிய சியான்சின்பான் மற்றும் சியான்சின் யீபான் என்ற இரு நூல்களில், உணவு சிகிச்சை பற்றிய சிறப்பு பகுதி இடம்பெறுகின்றது.

மனிதரின் உடல் நலம், சரியான உணவை அடிப்படையாக கொண்டது. தமது விருப்பத்தின் படி மருந்தை சாப்பிடக் கூடாது. மருத்துவர், முதலில் நோய்க்கான காரணிகளைப் புரிந்துகொண்டு, உணவைப் பயன்படுத்தி, சிகிச்சை செய்ய வேண்டும். நல்ல பயன் இல்லை என்றால், மருந்தை பயன்படுத்தலாம் என்று, அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சுன் சிமியேள, 100 வயத்துக்கு கூடுதலாக வாழ்ந்தார். அதன் காரணமாகவே, அக்கால மக்களும் எதிர்கால மக்களும், உணவு சிகிச்சை என்ற அவருடைய கருத்தை ஏற்றுக்கொண்டனர். படிப்படியாக, உணவு சிகிச்சையும், மருந்து உணவும், சீனாவின் நாட்டுப்புறத்தில் உடல் நலம், நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான மிகவும் பிரபலமான வழிமுறையாக மாறியது.

உணவு சிகிச்சை என்பது, உணவை மருந்தாக ஆக்குவது. சீனாவில் அன்றாட காய்கறிகளையும் உணவையும் பயன்படுத்தி நோய் வராமல் தடுத்து சிகிச்சை செய்யும் நுட்பம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தெரிந்துள்ளது. குடும்பத்தில் யாருக்காவது ஜலதோஷம் பிடித்துவிட்டால், இஞ்சியும் சீன வெங்காயமும் தட்டிப்போட்டு, வெல்லம் சேர்த்து சூப் தயாரிக்கின்றனர். இதை சூடாக குடித்தால், பொதுவாக விரைவில் பயன் தெரியும். அன்றாட வாழ்வில், காலையில் இஞ்சியும் இரவில் முள்ளங்கியும் சாப்பிடுவது நல்லது என்று கூறப்படுகிறது. உப்பு, வினிகர், இஞ்சி, வெங்காயம், பூண்டு உள்ளிட்ட பொருட்களின் மருத்துவ பயன் பற்றி, நாட்டுப்புறத்தில் பல வகையான நம்பிக்கைகள் தொடர்ந்து நிலவுகின்றன.

உணவு சிகிச்சையில், மலர் உணவு ஒரு சிறப்பு பகுதியாகும். மலர்களை உணவாகத் தயாரிப்பது, கிமு ஆறாம், ஏழாம் நூற்றாண்டில் துவங்கியது.

வடசீனாவில் சுமார் 100 வகை மலர்களைச் சாப்பிடலாம். தென்மேற்கு சீனாவிலுள்ள யுவான்நான் மாநிலம், தாவர நாடு என்று கூறப்படுகிறது. அங்கு, சுமார் 260 வகை மலர்கள் சாப்பிடலாம்.

மலர் உணவு நோயை சிகிச்சை செய்வது மட்டுமல்ல, பெண்களைப் பொறுத்தமட்டில், அடிக்கடி மலர் சாப்பிடுவது நல்லது.

மருத்துவ உணவு என்பது, மருந்தை உணவாக உட்கொள்வது. மருந்தை உணவில் சேர்த்து, நோயை தடுத்து சிகிச்சை செய்யும் முறையாகும். இப்பொழுது, மருத்துவ உணவு சீனாவில் மேலும் பரவலாக வரவேற்கப்படுகிறது. கஞ்சி, ரொட்டி, சூப் மற்றும் வறுவல் இதில் இடம்பெறுகின்றன. இவ்வகை உணவை விற்பனை செய்யும் சிறப்பு உணவகங்கள் உள்ளது.

மருந்து உணவு, சீனாவில் வரவேற்கப்படுவது மட்டுமல்ல, சர்வதேச சந்தையில் நுழைந்துள்ளது. chrysanthemum மது, ஆரஞ்சுப்பழம் உள்ளிட்ட சீனாவின் மருந்து உணவுகள் வெளிநாட்டவரின் வாழ்விலும் இடம்பெற்றுள்ளன.

மூன்று திருவிழா உணவுகள்—

யுவான் சியெள, சுன்சி, மூன் கேக்

சீன பாரம்பரிய உணவுப்பழக்கத்தின் சிறப்பு, அது திருவிழாவுடன் குறிப்பிடத்தக்க தொடர்பு கொண்டிருப்பதாகும். வசந்த விழா, துவான் வூ திருவிழா, சுன் சியு திருவிழாஆகியவை, சீனாவின் நாட்டுப்புற பாரம்பரியத்தில் மிகவும் முக்கியமான மூன்று விழாக்களாகும். அடுத்து, இந்த விழாகளின் போது உண்ணப்படும் யுவான் சியெள, சுன்சி, மூன் கேக் உணவு வகைகளை அறிமுகப்படுகின்றோம்.

சீன மக்களைப் பொறுத்தவரை, வசந்த விழா, ஒரு ஆண்டில் மிகவும் முக்கியமான விழாவாகும். இவ்விழாவில் பல சாப்பாட்டு வழக்கங்கள் உள்ளன. சந்திர நாள் காட்டியின் படி ஜனவரி 15ம் நாள், யுவான் சியெள விழாவாக இருக்கிறது. இந்த நாளில், யுவான் சியெள எனும் இனிப்பைத் தின்ன வேண்டும். சீனாவின் வடபகுதியிலும், தென்பகுதியிலும் யுவான் சியெள வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. எனப்படுகிறது. தென்பகுதியில் அதன் பெயர் தான்யுவான். தான் யுவான் மற்றும் யுவான் சியெளவின் தயாரிப்பு முறை வேறுபட்டது.

வடபகுதியில், யுவான் சியெள சுருட்டப்பட வேண்டும். அதன் தயாரிப்பு முறை:எள்ளு, நிலக்கடலை, அவரை, சர்க்கரை முதலியவற்றை சேர்த்து, சிறிய உருண்டைகளாக உருண்டி, கொஞ்சம் நீரில் முக்கி எடுத்து, பசை அரிசி மாவில் நடுவில் வைக்கப்பட வேண்டும். இந்த சிறிய உருண்டைகள் பல முறை சுருட்டி, பசை அரிசி மாவை சேர்த்து, முட்டையை விட கொஞ்சம் சிறிய உருண்டைகளாக உருட்ட வேண்டும். பெய்ஜிங்கில், தேளசியான் சுன் மற்றும் குவேசியான் சுன் என்ற இரு பழைய கடைகளில் தயாரிக்கப்படும் யுவான் சியெள மக்களால் மிகவும் வரவேற்கப்படுகின்றன.

தென்பகுதியில், சூட்டான நீரையும் பசை அரிசி மாவையும் கலந்து பிசைந்து செய்யப்பட்ட வெள்ளை உருண்டைக்குள், பருப்புகள், நிலக்கடலை, எள்ளு, பேரீச்சம் பழம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள நின்போ தான்யுவானும், தென்மேற்கு பகுதியிலுள்ள சிசுவான் மாநிலத்தின் லைய் தான்யுவானும், மிகவும் புகழ்பெற்றவை.

யுவான்சியெளவும் தான்யுவானும், நீரில் வேக வைக்கப்பட வேண்டும். சீன மொழியில், யுவான்சியெள விழாவில் யுவான்சியெளவையும் தான்யுவானையும் சாப்பிடுவது என்பது, குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்வது என்று பொருளாகும்.

சந்திர நாள் காட்டியின் படி மே திங்கள் 5ம் நாள், சீனாவின் துவான் வூ திருவிழா கொண்டாடப்படுகிறது.

சுன்சி என்பது, துவான் வூ திருவிழாவின் முக்கிய உணவாகும் மூங்கில் இலையைப் பயன்படுத்தி, பசை அரிசி சுற்றி வேகவைக்கப்பட்ட உணவாகும் இது. சீனாவின் பல்வேறு இடங்களில் வாழும் மக்களுக்கு வேறுப்பட்ட உணவு வழக்கங்களை உள்ளதால், சுன்சியின் தயாரிப்பும் சுவையும் வேறுபட்டது. சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள சுசேள, சியாசின், நின்போ முதலிய இடங்களின் சுன்சிகளுக்குள், அவரை, பேரீச்சம் பழம், இறைச்சி முதலியவை இடம்பெறுகின்றன. வட சீனாவின் சுன்சி, பேரீச்சம் பழத்தையும் அல்லது வேறு பழங்களையும் முக்கியமாக கொண்டுள்ளது.

சுன்சி, நீண்ட வரலாறுடையது. சுன்சி தின்பது, QU YUAN எனும் நாட்டுப்பற்று கவிஞரை நினைவுப்படுத்துவதாகும். QU YUAN என்பவர், கி.மு.3வது நூற்றாண்டின் CHU நாட்டில் வாழ்ந்தார். அவருடைய தாய்நாடு, எதிரி நாட்டினால் கைப்பற்றப்பட்ட பின், அதிர்ச்சியடைந்த அவர், ஆற்றில் மூழ்கி இறந்தார். அந்த நாள், மே திங்கள் 5ம் நாள். அதன் பிறகு, அவரின் தியாகத்தை நினைவு கூரும் பொருட்டு, அதே நாளில், மக்கள், பிசைந்த சோறு திணிக்கப்பட்ட மூங்கில் குழாய்களை ஆற்றில் எறிந்தனர். படிப்படியாக, இது, சுன்சியாக மாறியது.

சுன்சி, விழாவின் உணவு மட்டுமல்ல, அன்பளிப்பாகவும் இருக்கிறது. துவான் வூ விழா காலத்தில் உறவினர் வரும் போது, சுன்சியை அன்பளிப்பாக அனுப்ப வேண்டும்.

சீன சந்திர நாள் காட்டியின் படி ஆகஸ்ட் திங்கள் 15ம் நாள், சீனாவின் சுன் சியு திருவிழா ஆகும். அந்த இரவில் நிலா மிகவும் வட்டமாக இருப்பதால், இது குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேரும் விழாவாகும். இந்த விழாவில் மூன் கேக் தின்ன வேண்டும். மூன் கேக் என்பது நிலா வடிவில் உள்ளே பொருள் வைக்கப்படும் கேக் ஆகும்.

சுன் சியு திருவிழா இரவில், சீன மக்கள் மூன் கேக், பழங்கள் முதலியவற்றை படையலிட்டு, நிலைவை வழிபடுகின்றனர். விழாவுக்கு பின் குடும்பத்தினர்கள் இணைந்து மூன் கேக் தின்கின்றனர்.

சீனாவின் பல்வேறு இடங்களில் பலவகை மூன் கேக்குகளைக் காணலாம். மக்கள் வாழ்க்கை நிலைமை உயர உயர, மூன் கேக்குகளின் வகையும்மாறியது. பாரம்பரிய, சர்க்கரை, பேரீச்சம் பழம், அவரை, இறைச்சி முதலியவற்றை தவிர, பழம், கோகோ உள்ளிட்ட புதிய பொருட்களும் வைக்கப்படுகின்றன.

சுன் சியு திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு கடைகளிலும், பல்வேறு வகை மூன் கேக்குவகைகள் விற்கப்படுகின்றன.

சீனாவின் தாம்புரின்

தாம்புரின், சீனப் பண்பாட்டில் ஒரு முக்கியமான பகுதியாகும். பாரம்பரிய சீன உணவான தாம்புரின், குடும்பத்தினர் சாப்பிடும் போது, ஒன்றுக்கு சேர்வது என்ற பொருளாகவும், விருந்தினருக்கு சாப்பிட வழங்கும் போது, மதிப்பு மற்றும் பேரூக்கம் என்ற பொருளாகவும் உள்ளது. ஒரு வெளிநாட்டவர் சீனாவுக்கு வந்து, தாம்புரின் சாப்பிட வில்லை என்றால், சீனாவுக்கு செல்ல வில்லை என்றே கூறிவிடலாம்.

தாம்புரின், மாவு வடையில், சில கொத்துக்கறிகளை வைத்து மடித்து சவைக்கப்படும் உணவாகும். கடந்த காலத்தில், தாம்புரின், விழாக்காலத்தில், குறிப்பாக சு சி திருவிழாவின் இரவில் சீன மக்கள் அனைவரும் சாப்பிடும் உணவாகும். தாம்புரினின் கொத்துக்கறிகள் தயாரிப்பு, மடித்து மூடும் வடிவம், தின்பது முதலியவற்றில் பல வழக்கங்கள் இருக்கின்றன.

முதலில், கொத்துக்கறிகள் தயாரிப்பு பற்றி கூறுகின்றோம். தாம்புரினின் கொத்துக்கறிகளில், இறைச்சியும் காய்கறியும் இருக்கின்றன. பொதுவாக, இறைச்சி மற்றும் காய்கறிகள் கலந்து, அதன் பின்பு, கத்தியால் பொடியாக நறுக்க வைக்க வேண்டும்.

கொத்துக்கறி தயாரிக்கப்பட்ட பின்பு, மடித்து மூடும் வடிவம் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான பிரதேசங்களில், பிறை நிலா வடிவில் தாம்புரின் மடித்து மூடப்படுகிறது.

கடைசியாக, தாம்புரின்களை வென்னீரில் போட்டு, சுமார் 10 நிமிடம் வேகவிட வேண்டும்.

தாம்புரின் தின்னும் வழக்கமும் எவ்வேறாக இருக்கிறது. முதலாவது தட்டு தாம்புரின், மூதாதையருக்கு படைத்து வழிபாடு செய்ய வேண்டும். இரண்டாவது தட்டு, நாட்டுப்புற கடவுள்களுக்குப் படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

மூன்றாவது தட்டு தாம்புரினை குடும்பத்தினர்கள் தின்னலாம்.

ஒவ்வொரு ஆண்டின் சு சி விழாவிலும், தாம்புரின், சாப்பிட வேண்டிய உணவாகும். வெளியே வேலை செய்யவோ, கல்விகற்கவோ, வணிகம் செய்யவோ குடும்பத்தினர் சென்றிருந்தாலும் அவர்கள், வீட்டுக்கு திரும்பி, ஒன்றுக்கு இணைந்து சேர்ந்து தாம்புரின் சாப்பிட வேண்டும்.

தற்போதைய வாழ்வில், பண்பாட்டுச் சிறப்பைத் தவிர, தாம்புரினுடன் தொடர்புடைய பல்வேறு நடைமுறைகள் மாறிவிட்டன. தாம்புரின் தின்னும் வழக்கமும் மேலும் குறைந்து விட்டது.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040