• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[அலங்கார வேளைபாடுகள்]

தாள் வெட்டி அலங்கரிப்பு

தாள் அலங்காரம் சீனாவில் பல பகுதிகளில் வசந்த விழாவின் போது காணப்படக் கூடியவை. மக்கள் விழாக் காலங்களுக்காக கதவுகள், நிலைகள் ஜன்னல்கள் அல்லது மேசைகளில் தாள் அலங்கரிப்புக்களை ஒட்டுகின்றார்கள்.

இது எப்போது தோன்றியது எனக் கூறுவது கடினம். இது சமயச் சடங்குகளில் அல்லது பலியிடலில் இருந்து தோன்றியதாக ஒரு கதை இருக்கின்றது. பண்டைக்கால மக்கள் தாளில் மக்கள் அல்லது மிருகங்களின் உருவங்களை வரைந்து வெட்டினார்கள். மரண வீடுகளில் இறந்தவர்களை புதைக்கும் போதோ அல்லது எரிக்கும் போதோ அவர்களுடன் சேர்த்து தான் உருவங்களை எரித்தனற் அல்லது புதைத்தனர். ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்குக்கு முன்பு வெட்டிய தாள்கள் அலங்கரிப்புக்காக பயன்படுத்தப்பட்டன. வரலாற்றுப் புத்தகங்களின் படி தாங் வம்சத்தில் பெண்கள் வெட்டப்பட்ட தாள்களை தலை அலங்காரமாக பயன்படுத்தினர். சொங் வம்சத்தில் அன்பளிப்புக்களை அலங்கரிப்பதற்கு இது பயன்படுத்தப்பட்டது. மக்கள் இவற்றை ஜன்னல்கள் அல்லது தகவுகளில் ஒட்டினார்கள் அல்லது இதனை சுவர்கள், கண்ணாடிகள் அல்லது விளக்குகள் மீது அளங்காரங்கள் போல பயன்படுத்தினர்.

தாள் அலங்காரம் எல்லாம் கையினால் செய்யப்படுகின்றன. இதன் நுட்பங்களை அறிந்து கொள்வது சுலபமானது. கைவினைஞன் அல்லாதவர்களுக்கு ஓர் கத்தியும் தாளும் மட்டும் தேவை. கைவினைஞனானவர்களுக்கு சிக்கலான வேலைப்பாடுகளை உருவாக்குவதற்கு கத்திகள் மற்றும் பல்வேறுவகை செதுக்கல்களும் தேவைப்படுகின்றன. இது ஒரே தாளாகவும் இருக்கலாம் பலதுண்டுகளாகவும் இருக்கலாம். எளிமையான வடிவங்களை கத்தியினால் வெட்டி எடுக்கலாம். சிக்கலான வடிவமைப்புகளுக்கு முதலில் தாளின் மீது செதுக்கலை ஒட்டி, பிறகு பல வகையான கத்திகளை கொண்டு, வெட்டி எடுத்தனர் சிறிது கூட பிசகு இல்லாமல் இதைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எல்லாமே வீணாகிவிடும்.

தாள் அலங்காரத்தில் பூக்கள், பறவைகள் விலங்குகள் புகழ்பெற்ற மனிதக்கள் பழங்கால நாலவல்களின் நாயகர்கள் போன்றவற்றில் இருந்து பீகிங் இசை நடாத்தில் உள்ள முக ஒப்பனை என பல வகைகளாக கிட்டத்தட்ட எள்லாத் தலைப்புக்களையும் கொண்டிருக்கின்றன. தாள் அலங்காரம் சீனாவில் வேறுபட்ட பகுதிகளஇல் வெவ்வேறான பாணிகளைக் கொண்டிருக்கின்றது.

பழைய காலத்தில் நாட்டுப் புறத்தில் வாழ்ந்த பெண்கள் தங்களின் ஓய்வு நேரங்களஇல் ஒன்று சேர்ந்து தாள் அலங்காரம் செய்தனர். அவர்களுடைய நுட்பத்தினை மதிப்பிடுவதற்கு ஒரு வழியாக இருந்தது. சமூகம் வளர்ச்சியடையும் போது சிறிய அளவு மக்கள் இந்தத் திறனை கற்றார்கள். ஆனால் இப்போது சிலர் இதனை ஓர் தொழிலாக கொண்டிருக்கின்றனர். தற்போது சீனாவில் தொழிற்சாலைகளும் அமைப்புக்களும் தாள் அலங்காரத்துக்காக உள்ளன. பொருட்காட்சிகளும் பிரிமாற்றல்களும் இது தொடர்பாக தொடர்ச்சியாக நடைபெறுவதோடு இது பற்றிய புத்தகங்களும் வெளியிடப்படுகின்றன. தாள் அலங்காரமானது ஒரு அலங்கரிப்பு என்பதில் இருந்து ஒரு வகைக் கலையாக மாற்றமடைந்துள்ளது. அதே நேரத்தில் தாள் அலங்காரமானது காட்டூன், மேடைகள், சஞ்சிகளைகள். தொலைக்காட்சி தொடர்கள் போன்றவற்றில் கூட பயன்படுத்தப்படுகின்றன.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040