• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[மோர்சிங் போன்ற இசைக்கருவி]

காவ்சியெ

காவ்சியெ என்னும் இசைக்கருவி, சீனாவின் இசைக்கருவிகளில் அளவில் சிறிய இசைக்கருவியாகும். சீனாவில் நீண்ட வரலாறுடைய சிறுபான்மை தேசிய இன இசைக்கருவியும் ஆகும். கி.மு. 4000 ஆம் ஆண்டுகள் பழமையான சமூகத்தில் மக்கள் இவ்விசைக்கருவியைப் பயன்படுத்தினர். அப்போது, காவ்சியெ, ஹுவாங் என்று அழைக்கப்பட்டது.

இவ்விசைக்கருவி பல வட்டாரங்களில் பரவிவருகின்றது. இதன் வகையும் அதிகம். அதற்கு மூங்கிலால் அல்லது உலோகத்தால் தயாரிக்கப்பட்டன. இரண்டு வகைகள் உள்ளன. மெல்லிய செப்புத் தகடுகளின் எண்ணிக்கைக்கிணங்க, அது, ஒரு மெல்லிய செப்புத் தகட்டாலும் பல மெல்லிய செப்புத் தகடுகளாலும் பிரிக்கப்பட்டவை. இசைக்கும் வழிமுறை வேறுபட்டதால், அவை, விரலால் மீட்டும் வகையையும் பட்டு நூலால் இழுக்கும் வகையையும் கொண்டவை.

மூங்கிலால் தயாரிக்கப்பட்ட காய்சியெ எனும் இசைக்கருவியை இசைக்கும் போது, மூங்கிலின் வளைந்துகொடுக்கும் தன்மையைப் பயன்படுத்தி, மெல்லிய செப்புத் தகட்டை பலமுறை அதிர்வுறச் செய்வதன் மூலம் ஒலி எழுப்பலாம். சில மூங்கில் தட்டைகளைக் கயிற்றால் இணைத்தால், பல தகடுகளைக் கொண்ட காய்சியெ தயாரிக்கலாம். பல மூங்கில் தட்டைகளைக் கொண்ட காய்சியெ, பொதுவாக, 2 முதல் 5 வரையான மூங்கில் தட்டைகளால் தயாரிக்கப்பட்டவை. ஒலியின் அளவு, மெல்லிய செப்புத் தகடுகளின் நீளம், அகலம் முதலியவற்றால் நிர்ணயிக்கப்படும்.

உலோகத்தால் தயாரிக்கப்படும் காய்சியெ, பொதுவாகச் செப்பால் அல்லது இரும்பால் தயாரிக்கப்பட்டது. இலை வடிவம உடையது. உலோகத்தால் தயாரிக்கப்பட்ட காய்சியெயின் அளவு, மூங்கிலால் தயாரிக்கப்பட்டதை விட சிறியது.

இவ்விசைக்கருவியைத் தயாரிக்கும் வழிமுறையும் இசைக்கும் வழிமுறையும் தனித்தன்மை வாய்ந்தவை. இசைப்பவர், இடது கையின் பெரு விரல் மற்றும் சுட்டு விரலால் இசைக்கருவியைப் பிடித்த வண்ணம், மெல்லிய செப்புத் தகட்டை உதட்டின் நடுவில் வைத்து, வலது கையின் பெரும் விரல் மற்றும் சுட்டு விரலால் இசைக்கருவியின் நுனியை அசைத்தால் மெல்லிய செப்புத் தகடு அதிர்வடைந்து ஒலி எழும்புகிறது. பட்டு நூலால் இசைக்கும் வழிமுறை மேலும் தனிச்சிறப்பு வாய்ந்தது. இசைப்பவர் ஒவ்வொரு மெல்லிய செப்புத் தகட்டின் நுனியில் பட்டு நூல் ஒன்றைக் கட்டிவிட்டு, நூலின் நுனியைத் தன் வலது கையின் விரலில் கட்டிக்கொண்டு, இழுக்கும் போது மெல்லிய செப்புத் தகடு அதிர்ந்து ஒலி எழும்புகிறது. தவிர, இசையதிர்வு எழுப்பவும் ஒலியைப் பெருக்கவும் இசைப்பவர் தமது உதடுகளை முன்னோக்கி வட்டமாக குவிக்க வேண்டும். தவிர, இசைப்பவர், தன் வாயின் வடிவ மாற்றம், மூச்சுவிடுவதைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றின் மூலம், வேறுபட்ட ஒலி அளவுகளை இசைக்கலாம்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040