லிதுவேனியாவுக்கும் சீனாவுக்குமிடையிலான பதற்ற உறவு
2022-01-25 15:39:55

லிதுவேனிய அரசியல்வாதிகள் ஒரே சீனா கொள்கைக்கு சவால் விடுத்து சீனாவுடன் பதற்றத்தை ஏற்படுத்தியதால், உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களும் லிதுவேனியாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலீட்டுத் தொழில் நிறுவனங்களும் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளன என்று பல செய்தி ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவுடனான உறவுகளை மீட்டெடுக்குமாறு ஜெர்மனியின் சில தொழில் நிறுவனங்கள் லிதுவேனிய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. இல்லையேல் லிதுவேனியாவை விட்டு வெளியேறுவோம் என்று தெரிவித்துள்ளன.

ஒரு பொது மக்கள் கருத்து கணிப்பின் படி, லிதுவேனிய அரசின் மீதான மக்களின் நம்பிக்கை 17.3 விழுக்காடாகக் குறைந்துள்ளது. லிதுவேனியா நிறுவப்பட்ட பிறகு பதிவானதில் இது மிகக் குறைந்த அளவாகும். இது லிதுவேனியாவின் சீனாவுடனான உறவுகளுடன் நெருங்கிய தொடர்புடையது  என்று இக்கருத்து கணிப்பு நிறுவனத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறினார்.