சீனா-ஐந்து மத்திய ஆசிய நாடுகள் ஒத்துழைப்புக்குப் புதிய யுகம்
2022-01-26 16:55:37

சீனாவுக்கும் ஐந்து மத்திய ஆசிய நாடுகளுக்கும் இடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்டு 30ஆவது ஆண்டு நிறைவுக்கான காணொளி உச்சிமாநாடு 25ஆம் நாள் பிற்பகல் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதில் இரு தரப்பின் ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து முன்வைத்த 5 யோசனைகளை, 5 மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். சீன-மத்திய ஆசிய பொது சமூகத்தை உருவாக்குவது என்று இரு தரப்பும் அறிவித்தது, ஒத்துழைப்பு உறவுக்குப் புதிய யுகத்தைத் திறந்து வைக்கிறது.

எதிர்காலத்தை எப்படி துவக்கி வைப்பது என்பதற்கு, நட்புறவின் முன்மாதிரியைப் பரவல் செய்தல், தரமுள்ள வளர்ச்சி மண்டலத்தைக் கட்டியமைத்தல், அமைதி காப்புக் கவசத்தை வலுப்படுத்துதல், பல தரப்பட்ட தொடர்பு வாய்ந்த வீட்டை உருவாக்குதல், அமைதியாக வளரும் பூமி தாயகத்தைப் பேணிக்காத்தல் ஆகிய 5 யோசனைகளை ஷிச்சின்பிங் முன்வைத்தார். இவை, இரு தரப்பின் பயனுள்ள ஒத்துழைப்புக்கு மேலும் பரந்தப்பட்ட வாய்ப்பை வழங்கி, இரு தரப்பு மக்களுக்கு நலம் விளைவிப்பது உறுதி.

கடந்த 30 ஆண்டுகளில் சீனா, 5 மத்திய ஆசிய நாடுகளுடனான வர்த்தகத் தொகையை 100க்கும் மேல் மடங்கு அதிகரித்துள்ளது. அந்நாடுகளில் நேரடி முதலீட்டுத் தொகை 1400 கோடி டாலரைத் தாண்டியது. இவ்வாண்டு மத்திய ஆசிய நாடுகளுக்கு 5 கோடி தடுப்பூசிகளை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.