அமெரிக்க அரசியல்வாதிகளின் தவறான செயல்
2022-01-26 20:22:23

சீனாவின் "கடுமையான" தொற்றுநோய் தடுப்புக் கொள்கையால், சீனாவுக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை வெளியேற்றுவதற்கு அனுமதி வழங்குவது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கருத்தில் கொண்டு வருகின்றது. அமெரிக்க அரசியல்வாதிகளின் இச்செயல், சீனாவின் தொற்று நோய் தடுப்புக் கொள்கைக்கு எதிராக அவதூறு பரப்பி, பெய்ஜிங் குளிர்கால விளையாட்டுப் போட்டியைத் தடுத்து, மோதலையும் பிரிவினையையும் மேலும் தூண்டுவதாக அமைந்துள்ளது..

இதனிடையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர், ரஷிய அரசுத் தலைவர், போலந்து அரசுத் தலைவர், அர்ஜென்டீன அரசுத் தலைவர், ஐந்து மத்திய ஆசிய நாடுகளின் அரசுத் தலைவர்கள் ஆகியோர் இப்போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். ஏறக்குறைய 100 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 2800க்கும் மேற்பட்ட வீரர்கள் சீனாவில் ஒன்று திரளவுள்ளனர்.