சீன விண்வெளி இலட்சியத்தின் சாதனைகள்
2022-01-28 20:56:31

“2021 சீன விண்வெளி வெள்ளையறிக்கை” ஜனவரி 28ஆம் நாள் வெளியிடப்பட்டது. இது, சீனா வெளியிட்டுள்ள ஐந்தாவது விண்வெளி வெள்ளையறிக்கையாகும்.

கடந்த 5 ஆண்டுகளில், விண்வெளியின் தோற்றம் மற்றும் வளரச்சி உள்ளிட்ட அறிவியல் தலைப்புகள் குறித்து, சந்திரன் மற்றும் செவ்வாய் ஆய்வுத் திட்டப்பணிகளை மேற்கொண்டு வரும் சீனா, மனித குலத்துக்கு மதிப்புள்ள சாதனைகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக, பெய்தோவ் அமைப்பு முறை, வானிலை, போக்குவரத்து, பேரிடர் சமாளிப்பு முதலிய துறைகளில் பல்வேறு நாடுகளுக்கு உதவி வழங்குகிறது.

தற்போதைய உலகம், விண்வெளி துறையில் மாபெரும் சீர்திருத்தம் நடைபெறும் புதிய கட்டத்துக்குள் நுழைத்துள்ளது. விண்வெளி துறையில் மனித குலப் பொது சமூகத்தை உருவாக்கும் சிந்தனையை, சீனா முன்வைக்கிறது. உலகத்துக்கு முன், சீன விண்வெளி துறையின் மேலதிக திறப்பு, ஒத்துழைப்பு மற்றும் பகிர்வு செயலாக்கத்தில் வரும்.