தொடர்ந்து வெளிநாட்டு திறப்பு அளவை விரிவாக்கி வரும் சீனா
2022-01-28 15:01:30

பொருளாதார மற்றும் வர்த்தகத் துறையில் சீனாவை விட்டு விலகுவது பற்றிய கூற்று ஆதாரமற்றது என்று பிரிட்டனின் லோரேசா ஆலோசனை தொழில் நிறுவனத்தின் பொது பங்குதாரர் ஒருவர் தெரிவித்தார். சமீபத்தில் வெளியிட்ட 2021இல் சீனப் பொருளாதாரத் தரவுகளும் சீனா மற்றும் இதர நாடுகளின் இரு தரப்புப் பொருளாதார மற்றும் வர்த்தக சாதனைகளும் இப்பொது பங்குதாரரின் கருத்தை மீண்டும் நிரூபித்துள்ளன.

2021ஆம் ஆண்டில், சீனாவின் மொத்த சரக்கு ஏற்றுமதி இறக்குமதி தொகை 39இலட்சத்து 10ஆயிரம் கோடி யுவானை எட்டி, வரலாற்றில் உச்ச நிலையில் பதிவானது. முழு ஆண்டிலும் சீனா பயன்படுத்திய அன்னிய முதலீட்டு தொகை முதன்முறையாக ஒரு லட்சம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. மேலும், எண்ணியல் பொருளாதாரக் கூட்டாளி உடன்படிக்கை(DEPA)உள்ளிட்டவற்றில் சேர்க்க சீனா அதிகாரப்பூர்வமாக விண்ணப்பம் செய்துள்ளது.

வெளிநாட்டு திறப்பை சீனா இடைவிடாமல் விரிவாக்கி, உலகத்துடனான தொடர்பை நெருக்கமாக்கி வருவதை இவை முழுமையாக எடுத்துக்காட்டியுள்ளன.

தற்போது, உலகப் பொருளாதார மீட்சிக்குவழிகாட்டும் முக்கிய ஆற்றலாக சீனா மாறியுள்ளது.

உலகம் நலமாக இருந்தால் தான், சீனா நலமாக இருக்க முடியும். சீனா சிறப்பாக இருந்தால், உலகமும் மேலும் சிறப்பாக இருக்கும் என்று பல தகவல்களும் உண்மைகளும் நிரூபித்துள்ளன. ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறுவதே, வளர்ச்சி திசையாகும்.