பசுமை மிக்க குளிர்கால ஒலிம்பிக் என்ற வாக்குறுதியுடன் சீனா செயலாக்கம்
2022-02-01 17:44:37

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி கார்பன் நடுநிலையை எட்ட விடா முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மையில், ஜெர்மனயின் முனிச் மெர்குரி நாளிதழ் தனது இணையத்தளத்தில் வெளியிட்ட கட்டுரையில், பெய்ஜிங் ஒலிம்பிக்கின் ஆயத்தப் பணிகளில் குறைந்த கார்பன் வெளியேற்றம் மற்றும் எரியாற்றல் சிக்கனத்தை நனவாக்க, சீனாவின் முயற்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன.

2015ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் நடத்தும் தகுதியை வெற்றிகரமாக விண்ணபித்த பிறகு, பசுமையான ஒலிம்பிக் என்ற கண்ணோட்டத்தைச் சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழலின் மேம்பாடு, பிரதேசத்தின் புதிய வளர்ச்சி, மேலும் அருமையான வாழ்வு ஆகிய மூன்று துறைகளில் சீனா 119 விரிவான நடவடிக்கைகளை வகுத்துள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள், நகர வளர்ச்சி, உயிரின சூழலின் மேம்பாடு முதலியவற்றைப் பன்முகமாகக் கருத்தில் கொண்டு, எரியாற்றல், விளையாட்டரங்கு, போக்குவரத்து உள்ளிட்டவை பசுமையான முறையில் கட்டியமைக்கப்பட்டுள்ளன என்பது அறிந்து கொள்ளலாம்.

மிக முக்கியமான எரியாற்றல் உத்தரவாதத்தை எடுத்துகாட்டாக கூறி, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் 26 விளையாட்டரங்குகள் அனைத்தும் 100விழுக்காட்டு பசுமையான மின்சார விநியோகத்தை நனவாக்கியுள்ளன. விளையாட்டரங்குகளில் முற்றிலும் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் பயன்படுவது வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.

தவிரவும், குளிர்கால ஒலிம்பிக்கிற்கு சேவையளிக்கும் வாகனங்களில், ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 80விழுக்காட்டை வகித்துள்ளது. இது, குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் இல்லாத அளவில் மிக அதிக பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் அமைப்புக் குழு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கார்பன் வெளியேரற்றத்தைக் குறைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளது. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் சீனாவின் தொடரவல்ல வளர்ச்சிக்குப் பங்காற்றும் என்ற வாக்குறுதியைச் சீனா நனவாக்கியுள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தாமஸ் பாச் அண்மையில் குறிப்பிட்டார்.