ஒலிம்பிக்கின் பாதுகாப்பு பற்றி முற்றிலும் நம்பத் தக்கது!
2022-02-02 19:35:30

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் பாதுகாப்பானதொரு விளையாட்டுப் போட்டியாக இருக்கும் என்று பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் மருத்துவ நிபுணர் குழுவின் தலைவர் பிரையன் மெக்லோஸ்கி  மதிப்பிட்டார். பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் கோவிட்-19 தடுப்பு அமைப்பு முறை சுமுகமாக இயங்கி வருகிறது. அதை நாங்கள் முற்றிலும் நம்பத் தக்கது என அவர் கருத்து தெரிவித்தார்.

ஆனால், சீனாவின் முயற்சி அளவுக்கு மீறி கண்டிப்புடன் இருக்குமென சில மேற்கத்திய நாட்டு செய்தி ஊடகங்கள் திரித்துப்பரப்பியுள்ளன. வைரஸ் தடுப்புக்கான சீனாவின் நடவடிக்கைகளைத் திரித்துக் குளிர்கால ஒலிம்பிக்கின் சூழலைச் சீர்குலைக்க முயன்றுள்ளன. உண்மை என்ன என்பதைக் குறித்து குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களும் தொடர்புடைய தரப்புகளும் நன்றாக அறிந்துக் கொண்டுள்ளனர். பாதுகாப்பு என்பது சிறந்த விளையாட்டுப் போட்டியின் அடிப்படையாகும். குளிர்கால ஒலிம்பிக்கை இலக்கு வைத்து, சீனானின் தொற்று நோய் தடுப்புக் கொள்கைகளை அவதூறு பரப்பிய சில மேற்கத்திய நாட்டுச் செய்தி ஊடகங்களின் செயல், குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைவருக்கும் அவமரியாதையாக இருக்கும். உயிருக்கும் பொறுப்பேற்கவில்லை.

அவதூறுகள் அனைத்தும் பலிக்காது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 30த்துக்கும் மேலான சர்வதேச அரசியல் தலைவர்கள் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் துவக்க விழா மற்றும் தொடர்புடைய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக உறுதிப்படுத்தினர். கோவிட்-19 தடுப்பில் சீனாவின் சாதனைகள் மீதான ஆக்கப்பூர்வமான பாராட்டுக்களையும் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் பாதுகாப்பாக நடைபெறுவதில் முழுமையான மனநம்பிக்கையையும் இது வெளிக்காட்டியுள்ளது.