சீனா மற்றும் உலகத்துக்குக் கூட்டு வெற்றி கொடுக்கும் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்
2022-02-03 17:15:23

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் தன்னார்வ தொண்டர்கள் பலர் லீ சியா போல பெரும் உற்சாகத்துடன் பாடுப்பட்டு வருகின்றனர். 2019ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தன்னார்வ தொண்டர்களின் உலகளாவிய சேர்க்கைப் பணி துவங்கிய 4 நாட்களுக்குள் மட்டும், 4லட்சத்து 60ஆயிரத்துக்கும் மேலானோர் விண்ணப்பித்தனர். ஒலிம்பிக்கை திறந்ததாக நடத்துவதை இது வெளிக்காட்டுகிறது. மேலும், சீனாவின் ஈர்ப்பாற்றலையும் வெளிக்காட்டுகிறது.

2015ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்கை நடத்தும் தகுதியை வெற்றிகரமாக விண்ணபித்த பிறகு, பெய்ஜிங் ஒலிம்பிக் மற்றும் பிற நாடுகளின் விளையாட்டுப் போட்டி நடத்தும் அனுவபங்களைக்  கற்றுக்கொண்டு, குளிர்கால ஒலிம்பிக்கின் அனைத்து ஏற்பாடு பணிகளும் “திறந்த கண்ணோட்டத்துடன்” செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் அமைப்புக் குழு 37 வெளிநாட்டு நிபுணர்களையும், 207 வெளிநாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர்களையும் குளிர்கால ஒலிம்பிக்கின் ஏற்பாடு பணிகளில் சேர்த்து கொண்டது.

அதே வேளையில், விளையாட்டு அரங்கின் கட்டுமானம், பனி மற்றும் பனிக்கட்டித் தயாரிப்பு, விளையாட்டுப் போட்டிகளின் அமைப்பு, விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சி உள்ளிட்ட துறைகளில், சீனா சர்வதேச விளையாட்டு அமைப்புகளுடன் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைத்துள்ளது. பெரும் முன்னேற்றமடைந்ததோடு, சீன-வெளிநாட்டு விளையாட்டுத் துறையிலான பரிமாற்றத்தையும் முன்னேற்றியுள்ளது.

உலகம், எதிர்காலம் மற்றும் நவீனமயமாக்கலை எதிர்நோக்கி, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக், வெளிநாட்டுத் திறப்பின் உந்து ஆற்றலாக மாறுவது சீனாவின் வாக்குறுதியாகும். 2016-2025ஆம் ஆண்டுக்கான பனி விளையாட்டு வளரச்சித் திட்ட வரைவின்படி, 2025ஆம் ஆண்டு, சீனப் பனி விளையாட்டுத் துறையின் மொத்த மதிப்பு 1லட்சம் கோடி யுவானை எட்டவுள்ளது. நிறைய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கை வாய்ப்பாக கொண்டு வளர்ச்சியடைந்துள்ளன.

சீனாவின் வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்குவதற்கான உந்து ஆற்றலாக, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் உலக விளையாட்டின் லட்சியத்திற்கும் பனி விளையாட்டுத் துறைகளுக்கும் மாபெரும் வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக், விளையாட்டு நிகழ்ச்சி மட்டுமல்லாமல், பல்வேறு நாகரிகங்களுக்கிடையேயான பரிமாற்ற மேடையாகவும் விளங்குகிறது.

பிப்ரவரி 4ஆம் நாள் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் துவங்கவுள்ளது. இந்த திறந்த மேடையில் ஒன்றுகூடி உலக மக்கள் விளையாட்டின் மாபெரும் நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். மேலும், உலக விளையாட்டுப் பரிமாற்றம், திறப்பு ஒத்துழைப்பு, நாகரிகப் பரிமாற்றத்தை முன்னேற்றுவதற்கான சீனாவின் மனவுறுதியையும் முயற்சியையும் காண்பார்கள்.