உலகத்துக்கு ஒன்றுபடும் சக்தியைத் தரும் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்
2022-02-04 17:30:25

ஒன்றுபட்டால் தான், மேலும் விரைவாகவும் உயரமாகவும் வலிமையாகவும் மாறலாம் என்று சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பாச் விளையாட்டு வீரர்களுக்கு விடுத்த வேண்டுகோள் இதுவாகும். பிப்ரவரி 4ஆம் நாளிரவு துவங்கவுள்ள பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் உலகிற்க்கு ஒன்றுபடும் சக்தியைக் கொண்டு வருவது உறுதி.

உலக கவனத்தை ஈர்க்கும் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் சுமார் 90 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 3000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். முந்தைய குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை விட, நடப்பு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் மொத்த எண்ணிக்கையும் பதக்கங்களின் எண்ணிக்கையும் மிக அதிகமானவை.

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் நடைபெறுகின்ற போது, உலகம் நிறைய அறைகூவல்களை எதிர்நோக்கியுள்ளது. கோவிட்-19 தொற்று நோய் தொடர்ந்து பரவி வருகின்றது. புவிசார் அரசியல் பதற்ற நிலை தீவிரமாகியுள்ளது. குளிர்கால ஒலிம்பிக்கும் அரசியல் தலையீட்டைச் சந்தித்துள்ளது. இந்த பின்னணியில், மேலும் ஒன்றுபடுதல் என்ற ஒலிம்பிக்கின் முழக்கம் தற்கால உலகிற்கு மிக தேவையானது ஆகும். பகிரப்பட்ட எதிர்காலத்திற்காக ஒன்றாக என்ற பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் முழக்கத்தைச் சீனா எழுப்பியதன் காரணம் இதுவுமாகும்.

6ஆண்டுகளாக ஏற்பாடு செய்து தொற்று நோய் பரவல் உள்ளிட்ட இன்னல்களைச் சமாளித்து பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் 4ஆம் நாள் அதாவது இன்றிரவு துவங்கவுள்ளது. விளையாட்டு எழுச்சியைப் பயன்படுத்தி உலகத்தை ஒன்றுபடுத்தும் சிறந்த மேடையாக பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் மாறியுள்ளது. மனித குலத்தின் பொது எதிர்காலம் உருவாக்குவதை முன்னேற்றும் மாபெரும் விளையாட்டு நிகழ்ச்சியாகவும் விளங்குகிறது.

சீனா தயாராக உள்ளது. உலகத்தின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பெய்ஜிங்கில் ஒன்றுகூடி, மேலும் விரைவு, உயரம், வலிமை மற்றும் ஒன்றுபடுதலுக்காக போராடுவர்.