குளிர்கால ஒலிம்பிக் வாக்குறுதியும் புத்துயிர் பெற்ற சீன-ரஷிய உறவும்
2022-02-05 19:14:29

24ஆவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா 4ஆம் நாளிரவு பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் வாக்குறுதியின்படி கலந்து கொண்டார்.

இதற்கு முன் புதினுடன் சந்திப்பு நடத்திய போது ஷிச்சின்பிங் கூறுகையில், குளிர்கால ஒலிம்பிக் வாக்குறுதியை நனவாக்கியுள்ளோம். இந்த சந்திப்பு மூலம் சீன-ரஷிய உறவுக்கு மேலதிக உயிராற்றலை வழங்குவது நிச்சயம் என்று தெரிவித்தார். முந்தைய வாக்குறுதியை மீளாய்வு செய்த அவர்கள், இருநாட்டுறவு பற்றியும், உலக வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையுடன் தொடர்புடைய பல முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடத்தினர். இச்சந்திப்பில் மிக முக்கிய அரசியல் சாதனையாக, புதிய யுகத்தில் சர்வதேச உறவு மற்றும் உலகளாவிய தொடரவல்ல வளர்ச்சி பற்றிய சீன-ரஷிய கூட்டறிக்கையை இருதரப்பும் வெளியிட்டன. மாஸ்கோ சர்வதேச உறவு கழகத்தின் பேராசிரியர் பாலபனொவின் பார்வையில், ரஷிய-சீன நட்புறவு இருதரப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல, சர்வதேச பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பதற்கும் துணைபுரியும்.

ஜனநாயகம், வளர்ச்சி, பாதுகாப்பு, ஒழுங்கு ஆகியவற்றுக்கான கண்ணோட்டத்தில் இருநாடுகளின் பொது நிலைப்பாடு குறித்து இருதரப்பின் கூட்டறிக்கையில் முக்கியமாக விளக்கிக் கூறப்பட்டது கவனிக்கத்தக்கது.

நடைமுறை ஒத்துழைப்பானது, நடப்பு சந்திப்பில் மற்றொரு முக்கிய அம்சமாகும். சுமார் 20 ஒத்துழைப்பு ஆவணங்கள் கையழுத்தாகியுள்ளன. இருநாடுகளிடையே உயர்நிலை பரஸ்பர நம்பிக்கை மற்றும் பன்முக நடைமுறை ஒத்துழைப்பு, இருநாட்டு மக்களுக்கு நன்மை தருவது மட்டுமல்ல, மாறி வரும் சர்வதேச நிலைமைக்கும் நிலைத்தன்மை மற்றும் நேர்மறை ஆற்றலை கொண்டு வருவது உறுதி.