சீன வசந்த விழாவில் வளர்ச்சியடைந்த பனி பொருளாதாரம்
2022-02-07 21:17:20

2022ஆம் ஆண்டு, சீனாவின் புலி ஆண்டாகும். ஆனால், புலியை விட, ராட்சத பாண்டா வடிவிலான பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மங்களச் சின்னம் மேலும் வரவேற்கப்பட்டுள்ளது. இந்த மங்களச் சின்னம் தொடைர்புடைய பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வசந்த விழா விடுமுறையில், சீன நுகர்வு சந்தையின் உயிராற்றல் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் காரணத்தால் மேலும் விடுவிக்கப்பட்டுள்ளது.

குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடர்புடைய வணிகப் பொருட்கள் மட்டுமல்லாமல், பனி விளையாட்டும் சீன மக்களால் வரவேற்கப்பட்டுள்ளது. சீனாவின் பனி உற்பத்தித் தொழில் பன்முகங்களிலும் வளர்ந்து வருவதை பனி விளையாட்டு, பனி சுற்றுலா, பனி விளையாட்டுச் சாதனம், பனி உற்பத்தித் தொழிலின் மீதான முதலீடு ஆகியவற்றிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.

குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வாய்ப்பாகக் கொண்டு, கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் பனி உற்பத்தித் தொழில் உயர்வேகமாக வளர்ந்துள்ளது. உள்ளார்ந்த ஆற்றல் மற்றும் உயிராற்றல் கொண்ட பெரிய நுகர்வோர் குழு, அதன் காரணங்களில் ஒன்றாகும்.