தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்காவின் செயல் தவறு
2022-02-09 15:30:47

சீனாவின் தைவானுக்குச் சுமார் 10 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா 7ஆம் நாள் முடிவு செய்தது. நடப்பு அமெரிக்க அரசு பதவியேற்ற பிறகு தைவானுக்கு ஆயுத விற்பனை செய்வது இது இரண்டாவது முறையாகும். "தைவான் சுதந்திரத்தை" ஆதரிக்க மாட்டோம் என்ற அரசியல் வாக்குறுதியை வாஷிங்டன் பலமுறை மீறி, சீனாவின் உள் விவகாரத்தில் தலையிட்டு வருகின்றது. தைவான் நீரிணை இரு கரைகளின் அமைதியையும் நிதானத்தையும் சீர்குலைப்பதில் அமெரிக்கா மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது என்பதை இந்தத் தீய செயல் முழுமையாகக் காட்டுகின்றது.

ஒரே சீனா என்ற கோட்பாட்டை அமெரிக்கா உண்மையாகப் பின்பற்ற வேண்டும். தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். சீனாவின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் "தைவான் சுதந்திரம்" பிரிவினைவாத சக்திகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

சீனா தனது இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களை உறுதியாகப் பாதுகாக்க நேர்மையான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.