ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவில் பல நாடுகள் சேர்ந்ததற்குக் காரணம் என்ன?
2022-02-09 18:52:52

சீன தொடர்வண்டிகள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, போக்குவரத்து செலவு 40 விழுக்காடு குறைந்துள்ளது. முன்பு இழந்த வாடிக்கையாளர்கள் இருப்புப்பாதை போக்குவரத்தை மீண்டும் தெரிவு செய்துள்ளனர் என்று அர்ஜெண்டினா சரக்கு வாகன இயக்குர் மாக்ஸிமிலி கூறினார். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் காரணாக, சீனாவுடன் அர்ஜெண்டினா உள்கட்டமைப்பு ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது. உலக உணவுக் களஞ்சியம் என போற்றப்பட்ட அர்ஜெண்டினாவின் தானிய உற்பத்தி பொருட்கள் குறைந்த செலவிலான இருப்பாதை போக்குவரத்து மூலம் சர்வதேச சந்தையில் விலை குறைவு என்ற மேம்பாட்டை மீண்டும் பெற முடியும்.

அர்ஜெண்டினா அரசுத் தலைவர் தனது சீனப் பயணத்துக்கு முன் கூறுகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு, அர்ஜெண்டினா வளர்ச்சியை நனவாக்கத் துணைபுரியும் என்று தெரிவித்தார்.

அர்ஜெண்டினாவைத் தவிர, லத்தீன் அமெரிக்க நாடுகள் இம்முன்மொழிவை வரவேற்று வருகின்றன. தற்போதுவரை 20 லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டு கட்டுமானத்துக்கான புரிந்துணர்வு குறிப்பாணையில் கையொப்பமிட்டுள்ளன.

விரிவான கலந்தாய்வு, கூட்டு கட்டுமானம் மற்றும் பகிர்வு, இம்முன்மொழிவின் ஈர்ப்பாற்றலாகும். இதில் இணைய விரும்பிய ஒவ்வொரு நாடும் இதன் மூலம் தனக்கு கிடைத்துள்ள வளர்ச்சி வாய்ப்பைக் கண்டுள்ளது. உட்புற தேவையால் தூண்டப்படும் சர்வதேச ஒத்துழைப்பை, எந்த சக்தியாலும் அரசியல் சுயநலத்தாலும் தடுக்க முடியாது.