போட்டியாற்றலின் சாக்குபோக்கில் அமெரிக்காவின் மேலாதிக்க திட்டவரைவு
2022-02-11 15:42:08

அமெரிக்க செனட் அவை அண்மையில் 2022 அமெரிக்க போட்டியாற்றல் திட்டவரைவை ஏற்றுக்கொண்டது. தயாரிப்பு, புத்தாக்கம் மற்றும் பொருளாதாரத் துறையில் அமெரிக்கா  பிற நாடுகளை விட முன்னணியில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென இத்திட்டவரைவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதில் சீனா பற்றிய பல அம்சங்கள் மக்களுக்கு நிறைய ஐயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும். உதாரணமாக, சீன வளர்ச்சிப் பாதையையும் உள்நாடு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகள் மீது அவதூறு பரப்பி, தைவான், சின்ஜியாங், திபெத் உள்ளிட்ட பிரச்சினைகளைப் பயன்படுத்தி சீனாவின் உள்விவகாரத்தில் தலையிட வேண்டும் என்பது அதில் வகுக்கப்பட்டுள்ளது.  போட்டியாற்றலைச் சாக்குபோக்காக கொண்டு சீனாவின் வளர்ச்சியைத் தடை செய்யும்  மேலாதிக்க திட்டவரைவு இது என்பது உறுதி.

நாடுகளிடையே போட்டி இருப்பது மிகவும் இயல்பானது. ஆனால் அது ஒருவரின் மீது ஒருவர் தாக்குதல் செய்யும் தீய போட்டியல்ல. சீன வளர்ச்சிக்கான நோக்கம் ஒருபோதும் அமெரிக்காவுக்குப் பதிலாக கொள்வது அல்ல. மாறாக சீன மக்களை இன்பமாகவும் அருமையாகவும் வாழச் செய்வது தான். இதனால், சொந்த நியாயமான வளர்ச்சியுரிமையை மற்றவர்கள் பறிக்க சீனா அனுமதிக்காது.

அமெரிக்காவின் உண்மையான எதிரி அமெரிக்கா தான். ஆனால் சில அமெரிக்க அரசியல்வாதிகள் அறிவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சி விதிக்குப் புறம்பாக, போட்டியாற்றலின் சாக்குப்போக்கில் சீனாவின் மீது தடை செய்வது அமெரிக்காவின் சொந்த நலன்களுக்கு தான் தீங்கு விளைவிக்கும்.

இதையடுத்து, இந்த போட்டியாற்றல் திட்டவரைவு பிரதிநிதிக் குழுவில் பரிசீலனை செய்யப்படவுள்ளது. சீனாவின் வளர்ச்சியைப் பகுத்தறிவு முறையில் கருத்தில் கொண்டு இத்திட்டவரைவின் முன்னேற்றப் போக்கை உடனடியாக  நிறுத்த வேண்டும். சீன உள்விவகாரத்தில் தலையிட்டு சீனாவின் உரிமைகளை சீர்குலைக்கும் எந்த செயலுக்கும் வலுவான உறுதியான பதில் நடவடிக்கைடயை சீனா மேற்கொள்வது உறுதி.