இறையாண்மையை அர்ஜென்டீனா பயன்படுத்துவதற்குச் சீனா ஆதரவு
2022-02-13 17:08:56

அண்மையில், அர்ஜென்டீன அரசுத் தலைவர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, கூட்டறிக்கை ஒன்றைச் சீனாவும் அர்ஜென்டீனாவும் வெளியிட்டன. மால்வினாஸ் தீவுகள் பிரச்சினையில் இறையாண்மையை அர்ஜென்டீனா பயன்படுத்துவதற்குச் சீனா ஆதரவு அளிக்கின்றது. ஐ.நா.வின் தொடர்புடையத் தீர்மானங்களின் படி, சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்க்கும் வகையில், தொடர்புடைய பேச்சுவார்த்தையைக் கூடிய விரைவில் மீட்க வேண்டும் என்று இக்கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைவரும் அறிந்தது போல், மால்வினாஸ் தீவுகள் பிரச்சினையின் உண்மை, காலனியாதிக்கவாத வரலாறு விட்டுச் சென்ற பிரச்சினையாகும்.  1965ஆம் ஆண்டில் ஐ.நா. பொது பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  பேச்சுவார்த்தையின் மூலம் இறையாண்மைப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமாறு பிரிட்டனுக்கும் அர்ஜென்டீனாக்கும் இத்தீர்மானம் வேண்டுகோள் விடுத்தது. ஆனால் பிரிட்டன் இதை மறுத்தது. பிரிட்டன் தரப்பின் காலனியாதிக்கவாதச் சிந்தனையைச் சர்வதேச சமூகத்தால் விரிவான முறையில் விமர்சிக்கப்பட்டது.