ஆஃப்கான் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்த அமெரிக்கா
2022-02-13 17:22:05

11ஆம் நாள் அமெரிக்க அரசுத் தலைவர் பைடன், முன்பு முடக்கி வைக்கப்பட்ட ஆஃப்கானிஸ்தான் மத்திய வங்கி கணக்கு தொடர்பான கட்டளையில் கையொப்பமிட்டார். அதன்படி, சுமார் 700 கோடி டாலர் மதிப்புள்ள சொத்தின் பாதியளவு, 9·11 தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடாக வழங்கப்படும். இன்னொரு பாதியளவு, தலிபான் அரசைத் தவிர்த்து, ஆஃப்கான் மக்களுக்கு அமெரிக்காவின் உதவி என்ற பெயரில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இச்செய்தி உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சொத்தின் முக்கிய பங்கு, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகிய அமைப்புகள் ஆஃப்கான் மக்களுக்கு அளித்த நிதி உதவி ஆகும். அமெரிக்கா, அதை எந்த விதத்திலும் பயன்படுத்தக் கூடாது. சொந்த நாட்டில் வைத்துக்கொள்ளும் உரிமை அதற்கு இல்லை.

தவிரவும், உள்நாட்டுப் பிரச்சினையால், 9·11 உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கான இழப்பீடு, 16 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு, 2017ஆம் ஆண்டு தான் முதன்முதலாக கொடுக்கப்படத் துவங்கியது என்ற உண்மை, உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டது.

உலகின் ஒரே ஒரு மிக பெரிய நாடான அமெரிக்கா, ஆஃப்கான் மக்களின் அவசரப் பணத்தைக் கொள்ளையடித்து வரும் இச்செயல், வெட்கக்கேடானது. உலக மக்கள், பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொது மதிப்பு வாய்ந்த மனித குல உரிமையைப் பேணிக்காத்து, பயனுள்ள முறையில் ஆஃப்கான் மக்களுக்கு உதவியளிக்க வேண்டும்.