சீனாவைக் கட்டுப்படுத்த இந்திய-பசிபிக் நெடுநோக்கு அறிக்கை வெளியீடு
2022-02-14 20:49:20

அமெரிக்க அரசு அண்மையில் இந்திய-பசிபிக் நெடுநோக்கு அறிக்கையை வெளியிட்டது. கடந்த சில ஆண்டுகளில் இருந்த செயல்களைப் போல, ஒரு மூடிய கூட்டணி அமைப்பை உருவாக்குவதன் மூலம், அமெரிக்க அரசு சீனாவை கட்டுப்படுத்த முயன்றது.

பெரும்பாலான ஆசிய-பசிபிக் பிரதேச நாடுகள், தற்சார்பு தூதாண்மை கொள்கையில் ஊன்றி நின்று வருகின்றன. சில நாட்களுக்கு முன் நடைபெற்ற குவாட் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் குறித்து, இந்திய முன்னாள் தூதரக அதிகாரி பரத் குமார் குறிப்பிடுகையில், இக்கூட்டம், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் காலத்தில் திட்டமிட்டு வழங்கப்பட்ட சதிவேலை ஆகும். அமெரிக்காவைப் பின்பற்ற இந்தியா முடிவு செய்தால், மோசமான விளைவுகளை எதிர்நோக்கும் என்று தெரிவித்தார்.

ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் நீண்டகாலச் செழுமைக்கு, கூட்டணியால் ஏற்பட்ட எதிரெதிர் நிலைக்குப் பதிலாக, பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு தேவை. சுயநலனுக்காக எடுக்கப்படும் எந்தவித பிரத்தியேக தந்திரங்களும் தோல்வியடையும் என்பதை காலம் நிரூபிக்கும்.