ஈர்ப்பு ஆற்றல் மிக்க சீனச் சந்தை
2022-02-16 21:48:53

சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட புதிய தகவலின்படி, ஜனவரி திங்களில், சீனாவில் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு முதலீட்டுத் தொகை 10 ஆயிரத்து 228 கோடி யுவானாகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட இது 11.6 விழுக்காடு அதிகம். சீனச் சந்தை மீது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வலுவான நம்பிக்கை இருப்பதை இது காட்டுகின்றது. சீனச் சந்தையில் கணிசமான லாபம் பெறுவதே அவை சீனாவில் முதலீடு செய்வதற்கான காரணமாகும். குறிப்பாக கரோனா நோய் பரவல் போக்கு இன்னும் கடுமையாக உள்ள சூழ்நிலையில், உலகளவில் வெளிநாட்டு முதலீடு மந்தமான நிலையில் சிக்கிக்கொள்ளும் பின்னணியில், சீனா இச்சாதனையைப் பெற்றுள்ளது. சீனாவில் நோய் பரவல் தடுப்பில் காணப்பட்ட தெளிவான முன்னேற்றம், சீனச் சந்தையின் பெரும் ஈர்ப்பு ஆற்றல் முதலியவையும் சுட்டிக்காட்டத்தக்கவை.

தவிரவும், இவ்வாண்டின் துவக்கத்தில் திட்டப்படி நடைமுறைக்கு வந்த ஆர்சிஈபி ஒப்பந்தம், இப்பிரதேசத்தில் பொருளாதார ஒத்துழைப்புக்கு மேலதிக வாய்ப்புகளை உருவாக்கி வருவது கவனிக்கத்தக்கது.