பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியால் ஈர்க்கப்படும் மிக அதிக பார்வையாளர்கள்
2022-02-17 17:48:52

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, இதுவரை மிக அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியாக மாறியுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு 16ஆம் நாள் வெளியிட்டுள்ள இச்செய்தி, உலகளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பனி விளையாட்டுகளை உலக மக்கள் கண்டுரசித்து, உற்சாகம், மகிழ்ச்சி, நட்பு ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்கின்றனர். பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் ஒற்றுமை, ஒத்துழைப்பு, விருப்பம் ஆகியவை உலகின் பல்வேறு நாடுகளுக்கு நம்பிக்கையையும் வலிமையையும் ஊட்டியுள்ளன.

அதே வேளையில், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக், சீனாவைப் புரிந்துகொள்ள உலகத்துக்கு மற்றொரு ஜன்னலைத் திறந்துள்ளது.

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் அழகியல் புத்தாக்கத்தை ஒருங்கிணைக்கும் தொடக்க விழா, விளையாட்டு அரங்கத்தில் மேம்பட்ட தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள், சீனத் தன்னார்வ தொண்டர்களின் உற்சாகம் முதலியவற்றின் மூலம், சில மேற்கத்திய செய்தி ஊடகங்கள் விவரித்ததற்குப் புறம்பான ஒரு உண்மையான சீனா வெளிக்காட்டப்பட்டது.