சமூக வலைதளத்தில் பிரபலம் - சீன அஞ்சல் நிறுவனத்தின் காஃபி கடை
2022-02-19 19:39:22


பிப்ரவரி 14ஆம் நாள், சீன அஞ்சல் நிறுவனத்தின் முதலாவது காஃபி கடையான ’போஸ்ட் காஃபி’சியாமென் நகரில் திறக்கப்பட்டது.  இத்தகவல், சீனாவின் சமூக வலைதளத்தில் பிரபலமடைந்து, அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. அஞ்சல் நிறுவனம்,புதிய தொழிலைத் தொடங்கியதுடன், காஃபி சந்தையில் இருக்கும் போட்டியையும்  அதிகரித்துள்ளது. இருப்பினும், நுகர்வோருக்கு மற்றொரு தேர்வு உண்டு. 2025ஆம் ஆண்டு வரை சீனாவின் காஃபி சந்தை 1லட்சம கோடி யுவானைத் தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காஃபி நிறுனங்களுக்கு மாபெரும் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. மற்றொரு கோணத்தில் காண் கையில், சீனாவின் மாபெரும் நுகர்வு சந்தையின் உயிராற்றல், காஃபி சந்தைக்கு வலுவான ஆதாரத்தை தந்து வருகிறது. எதிர்காலத்தில், அஞ்சல் நிறுவனம்  புதிய துறையில் தனது புதிய தொழிலை தொடங்குவதை போன்ற கதை தொடர்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.