பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தனிச்சிறப்புமிக்கது
2022-02-21 21:10:23

 படம்: news.cn

“இது, மிகவும் தனிச்சிறப்புமிக்க குளிர்கால ஒலிம்பிக்  விளையாட்டுப் போட்டி” என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தாமஸ் பாக் 20ஆம் நாளிரவு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் நிறைவு விழாவில் உரைநிகழ்த்துகையில் பாராட்டு தெரிவித்தார்.

2008ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் முதல் 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் வரை,  சீனா, தனது நடைமுறை நடவடிக்கையின் மூலம் ஒலிம்பிக் குறிக்கோளைப் பின்பற்றி வருகிறது.

கோடைக்கால மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளையும் நடத்திய பெய்ஜிங் அற்புதமானக உள்ளது என்று பாராட்டுவதற்குக் காரணம்

முதலில், சீனா உலகிற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி,  எளிமை, பாதுகாப்பு மற்றும் அற்புதமான ஒலிம்பிக் போட்டியை நடத்தியது. இந்த முயற்சியுடன், மேலும் வேகம், மேலும் உயர்வு, மேலும் வலிமை மற்றும் மேலும் ஒற்றுமை என  ஒலிம்பிக் எழுச்சியானது மேலும் ஒளிமிக்கது. விளையாட்டு அரங்குகளில், வீரர்கள் புதிய உலக சாதனைகளையும் புதிய ஒலிம்பிக் சாதனைகளையும் படைத்துள்ளனர். கூடுதலாக,  சீனாவில் 30 கோடி மக்கள் பனி விளையாட்டுக்களை அனுபவிப்பது என்ற இலக்கு நனவாக்கப்பட்டதுடன், உலகின் குளிர்கால விளையாட்டுத் துறை புதிய யுகத்திற்கு இந்த ஒலிம்பிக் கொண்டு சென்றுள்ளது.

மேலும், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் மற்றொரு சாதனை குறிப்பிடத்தக்கது. அதாவது, கோவிட்-19 பரவலைத் தடுப்புப் பணி பயன்மிக்கது. தொடர்புடைய புள்ளிவிவரங்களின்படி, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கிற்கான மூடிய வளைவுப் பகுதியில் கோவிட்-19 சோதனை முடிவில் 0.01சதவீதம் மட்டும் நேர்மறையான முடிவு  வந்தது. 

குறிப்பாக, பெருந்தொற்று நிலையிலும், மனிதகுலம் எதிர்கால பல அறைகூவல்களைச் சமாளிக்க வேண்டிய நிலையிலும், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் திட்டமிட்டப்படி வெற்றிகரமாக நடத்துவது, உலகிற்கு ஒற்றுமை மற்றும் அமைதிச் சக்திகளை கொண்டு வருகிறது.