உக்ரைன் பதற்றத்தைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை வேண்டும், அதைத் தீவிரமாக்க வேண்டாம்!
2022-02-22 21:01:09

21ஆம் நாளன்று, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அதேநாளில், உக்ரைனின் கிழக்குப் பகுதியிலுள்ள லுகான்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் டனெட்ஸ்க் மக்கள் குடியரசு  இருப்பதை ரஷியா அங்கீகரித்துள்ளது. உடனடியாக, ரஷியா மீது நிதி தடை விதிப்பதாக, அமெரிக்கா அறிவித்தது. அதைப் பின்பற்றி, தடை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் சில மேற்கத்திய நாடுகள் தெரிவித்துள்ளன.

உண்மையில், உக்ரைனில் தற்போதைய பதற்றம்,  அதிக சிக்கலான காரணிகள் ஒன்றாக சேர்ந்து ஏற்படுத்திய பின்விளைவு ஆகும். அண்மைக்காலமாக, ரஷியா உக்ரைனில் “அத்துமீறும்”என்று தகவலை வாஷிங்டன் இடைவிடமால் பரபரப்பாக்கி வெளியிட்டு வருகிறது. அமெரிக்காவின் இச்செயல், உக்ரைனின் பதற்றதைத் தீவிரமாக்கி வந்துள்ளது.

உக்ரைன் பதற்றத்தைத் தீர்ப்பதற்கு, நிலையைத் தீவிரமாக்குவதற்குப் பதிலாக, அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது தான் தீர்வாகும்.  தற்போது, உக்ரைனின் நிலைமை மோசமாகி வருகிறது. இதில் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்புகளும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட வெளிப்புறச் சக்திகள், பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் பணியில் அதிகமாக ஈடுபட வேண்டும்.  பதற்றத்தைத் தீவிரமாக்கி, பீதியை உருவாக்க வேண்டாம். உலகின் ஒரே அருமையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு, பெரிய நாடுகள் பொறுப்புணர்வுடன் தலைமையேற்ற வேண்டும்.