உலகப் பொருளாதாரத்துக்கு ஆதரவு அளித்து வருகின்ற சீனப் பொருளாதாரம்
2022-02-28 20:14:23

2021ஆம் ஆண்டு சீனத் தேசியப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான புள்ளிவிவர அறிக்கையைச் சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் பிப்ரவரி 28ஆம் நாள் வெளியிட்டது. 2021ஆம் ஆண்டு, சீனப் பொருளாதார அதிகரிப்பு விகிதம் 8.1 விழுக்காடாகும். உலகத்தின் 2வது நாடான சீனா பெற்றுள்ள இச்சாதனை, மீட்சியை நாடி வருகின்ற உலகப் பொருளாதாரத்துக்குப் பெரும் ஆக்கப்பூர்வமான ஆற்றலை ஏற்படுத்தியுள்ளது.

தவிர, சீனப் பொருளாதாரம், உலகப் பொருளாதாரத்துக்கு பயன்தரும் ஆதரவு அளித்து வருகிறது. 2021ஆம் ஆண்டு, உலகப் பொருளாதாரத்துக்கான சீனாவின் பங்கு விகிதம் 25 விழுக்காட்டை எட்டியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரை, சீனச் சந்தை பாதுகாப்பு மட்டுமல்லாமல், வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அதிகமான புதிய வாய்ப்புகளைக் கொண்ட சீனச் சந்தை, மென்மேலும் அதிகமான வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களை ஈர்த்து வருகிறது.

2022ஆம் ஆண்டு, பல்வேறு நெருக்கடிகள் நிலவுகின்றன. ஆனால், சீனப் பொருளாதாரத்தின் நீண்டகால சீரான வளர்ச்சி மாறாது.