மனித உரிமைப் பாதுகாப்பாளர் என்ற அமெரிக்காவின் தோற்றம் முற்றிலும் நொறுங்கியது!
2022-03-01 11:13:38

2021ஆம் ஆண்டு வாழ்நாளில் மிகவும் மோசமான ஆண்டாகும் என பாதிக்கும் மேலான அமெரிக்கர்கள் கருதுவதாக அண்மையில் நடைபெற்ற கருத்துக் கணிப்பில் தெரிய வந்தத்து. அமெரிக்காவின் மனித உரிமை நிலைமை மோசமாக மாறிக் கொண்டிருப்பது அந்நாட்டு மக்களின் இந்த கருத்து மூலம் வெளிகாட்டப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோய் பரவல் தடுப்பில் தோல்வி அமெரிக்க மனித உரிமையின் பெரிய நகைமுரண்களில் ஒன்றாகும். 2021ஆம் ஆண்டு அமெரிக்காவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை 3கோடியே 45லட்சத்து 10ஆயிரத்தைத் தாண்டியது. உயிரிழப்பு 4லட்சத்து 80ஆயிரத்தை எட்டியது. 2020ஆம் ஆண்டில் இருந்ததை விட, இந்த இரண்டு எண்ணிக்கையும் பெரிதும் அதிகரித்து உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. மக்களின் ஆயுட்காலம் 1.13வயது குறைந்துள்ளது. 2ஆவது உலகப் போருக்கு பின்பு ஏற்பட்ட மிகப் பெரிய சரிவு இதுவாகும். பொது மக்களின் உயிர் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல், அமெரிக்க அரசியல்வாதிகள் “வைரஸை” அரசியலாக்கியதன் தீங்கு விளைவு இதுவாகும்.

மேலும் 2021ஆம் ஆண்டு  அமெரிக்க மனித உரிமைப் பாதுகாப்பாளர் என்ற தோற்றம் சர்வதேச சமூகத்தில் முற்றிலும் நொறுங்கிய ஆண்டாகவும் உள்ளது. 2021ஆம் ஆண்டின் ஜனவரியில் ஏற்பட்ட “கேபிடல் ஹில்” கலவரம், ஆகஸ்டில் ஆப்கானிஸ்தானிலிருந்து ராணுவ வெளியேற்றம், டிசம்பரில் கேலிக்கையாக நடத்தப்பட்ட“ஜனநாயக மாநாடு”ஆகியவை அமெரிக்க மனித உரிமையின் செல்வாக்கு கண்முன் வீழ்ச்சியடைந்ததை உலகத்துக்கு வெளிகாட்டியவையாகும்.

அமெரிக்கா, மனித உரிமையைக் காரணமாக்கி கொண்டு பிற நாடுகளில் மனித உரிமை பேரிடரை ஏற்படுத்திய எடுத்துக்காட்டுக்களில் ஆப்கான் ஒன்றாகும். நியூயார்க் டைம்ஸ் இணையத்தளத்தில் கடந்த டிசம்பர் 18ஆம் நாள் வெளியிட்ட செய்தியின்படி, ஈராக், சிரியா மற்றும் ஆப்கானில் அமெரிக்கா நடத்திய 50ஆயிரத்துக்கும் மேலான வான் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரிழப்பை ஏற்படுத்தியது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மனித உரிமைப் பிரச்சினையில், அமெரிக்க அரசியல்வாதிகள் தன்னை தானே கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.