இனப் படுகொலை செய்த அமெரிக்கா!
2022-03-03 21:08:12

செவ்விந்தியர்களின் மீது அமெரிக்கா மேற்கொண்ட இனப் படுகொலையின் வரலாற்று உண்மைகள் மற்றும் நடைமுறை சான்றுகள் என்னும் அறிக்கையைச் சீன வெளியுறவு அமைச்சகம் பிப்ரவரி 2ஆம் நாள் வெளியிட்டது. செவ்விந்தியர்களின் உடல் மற்றும் பண்பாடு சீர்குலைக்கப்பட்ட போக்கை இவ்வறிக்கை விபரமாக எடுத்துக்கூறி, அமெரிக்கா மனித உரிமையை ஊறுபடுத்திய குற்றச் செயல்களை வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா உருவாக்கப்பட்டதன் முதல் இதுவரை, பல்வேறு கொடிய வழிமுறைகளின் மூலம், செவ்விந்தியர்களின் அடிப்படை வாழும் உரிமையையும் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய துறைகளின் அடிப்படை உரிமைகளையும் பறித்து வருகிறது. சர்வதேசச் சட்டத்தின்படியும் அமெரிக்காவின் உள்நாட்டுச் சட்டத்தின்படியும் அமெரிக்காவின் இச்செயல்கள் இனப் படுகொலைச் செயல்களாகும்.