தைவான் பயணத்தில் பொம்பேயோவின் உள்நோக்கம் என்ன?
2022-03-03 16:22:07

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ 2ஆம் நாள் முதல் சீனாவின் தைவான் பிரதேசத்தில் திடீரென பயணம் மேற்கொண்டார். பொம்பேயோ எப்படியானவர் என்பதை சர்வதேச சமூகம் முன்னதாகவே தெளிவாக அறிந்துள்ளது. நாங்கள் பொய் கூறினோம். ஏமாற்றினோம். திருடினோம் என்பது பொம்பேயோவின் “புகழ் பெற்ற” கூற்று ஆகும். தங்கள் பதவிக் காலத்தில் சாதனை ஒன்றும் இல்லாமல், வதந்தி பரப்புவதில் மிகவும் தேர்ச்சி பெற்ற அவர் அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான வெளியுறவு அமைச்சர் என செய்தி ஊடகத்தால் அழைக்கப்பட்டார்.

பதவியிலிருந்து ஓராண்டு விலகிய அவரின் தைவான் பயணத்தில் உள்நோக்கம் உண்டு. ஒரு புறம், அமெரிக்க அரசுத் தலைவரின் கனவை அவர் ஒருபோதும் கைவிடவில்லை. மேலும், மறுபுறம், 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடை விதிக்கப்பட்டதால், பொம்பேயோவின் வாழ்க்கை அவ்வளவு சுகமாக இல்லை. தைவான் ஜனநாயக முன்னேற்ற கட்சியை முட்டாளாகப் பயன்படுத்திச் சொற்பொழிவு போன்ற வழிமுறைகளின் மூலம் பணம் சம்பாதிக்க அவர் விரும்பினார்.

பொம்பேயோவின் தைவான் பயணத்துக்கு முந்தைய நாள், முன்னாள் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளால் உருவான பிரதிநிதிக் குழுவை அமெரிக்க அரசு தைவானுக்கு அனுப்பியது. அமெரிக்காவின் ஆளும் கட்சியும் சரி, எதிர் கட்சியும் சரி, தைவானை அரசியல் நலன் ஈட்டி வாக்குகளைப் பெறுவதற்கான கருவியாகப் பயன்படுத்துகிறது என்பதை இது வெளிகாட்டியுள்ளது.

பதற்றத்தை ஏற்படுத்தித் தைவான் மக்களின் நலன்களை தீங்கு விளைவிப்பதை தவிர, பொம்பேயோவின் பயணத்துக்கு வேறு எந்த பயன் இருக்காது.