மனித உரிமையில் சீனாவின் சாதனையை காட்டிய பெய்ஜிங் குளிர்கால பாராலிம்பிக்
2022-03-04 15:13:16

2022 பெய்ஜிங் குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி மார்ச் 4ஆம் நாளரிவு அதிகாரப்பூர்வமாக துவங்கவுள்ளது. ஒலிம்பிக் போட்டியைப் போல, பாராலிம்பிக் போட்டியும் அற்புதமாக நடைபெறும். விளையாட்டு வீரர்கள் மேலும் சிறந்த சாதனைகளைப் பெற போராடும் உலகத் தர மேடையாகப் பெய்ஜிங் மாறவுள்ளது. பெய்ஜிங் பாராலிம்பிக் போட்டிக்கான தன்னார்வ தொண்டர்கள் நுணுக்கமான சேவைகளை அளித்துள்ளனர். அவர்களின் மூலம், சீன மக்களின் விருந்தோம்பல் நன்கு உணர்ந்துள்ளதாக சர்வதேச பாராலிம்பிக் குழுவின் தலைவர் ஆண்ட்ரூ பார்சன்ஸ் தெரிவித்தார்.

நுணுக்கமான அக்கறை கொண்ட பாராலிம்பிக் போட்டி சீன மாற்றுத்திறனாளி விளையாட்டின் வளர்ச்சியை வெளிகாட்டியுள்ளது. அண்மையில், சீன மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு வளர்ச்சி பற்றிய வெள்ளையறிக்கையை சீன அரசு முதன்முறையாக வெளியிட்டுள்ளது. விரிவான தரவுகள் மற்றும் எடுத்துக்காட்டுக்களின் மூலம், சீன மாற்றுத்திறனாளி விளையாட்டு வளர்ச்சியின் விரைவான மேம்பாடு வெளிகாட்டப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி விளையாட்டு ஒரு கண்ணாடி போல, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பாதுகாப்பில் சீனா பெற்ற பெரும் சாதனைகள் வெளிகாட்டப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் இலட்சியம், சீனத் தேசிய பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியின் ஒட்டுமொத்த திட்ட வரைவிலும் தேசிய மனித உரிமைச் செயல்திட்டத்திலும் உள்ளடங்கும். அவர்களுக்கு கிடைக்கும் நன்மை மற்றும் பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றின் தொடர்ச்சியான மேம்பாடு சீன மனித உரிமைப் பாதுகாப்பின் சாதனைக்கான நல்ல சாட்சியாக மாறியுள்ளது.