27 பதில்களால் வெளிகாட்டப்பட்ட சீனாவின் பொறுப்பு
2022-03-08 12:45:35

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 7ஆம் நாள் சுமார் 2 மணி நேரத்தில் உக்ரைன் நிலைமை, வல்லரசுகளுக்கு இடையேயான உறவுகள், உலக மேலாண்மை உள்ளிட்டவை தொடர்பான 27 கேள்விகளுக்குப் பதிலளித்ததோடு, சீனாவின் தூதாண்மை கொள்கைகளையும் ஆழ்ந்த முறையில் விளக்கிக் கூறியுள்ளார்.

நோய் தொற்று பரவல், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், சீனா தொடர்ந்து உலகிற்கு, குறிப்பாக வளரும் நாடுகளுக்கு ஆதரவளித்து, நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் மற்ற தரப்புகளுடன் இணையும் ஒற்றுமை எழுச்சியை வெளிப்படுத்தியுள்ளது. நோய் தொற்று பரவல் நிலையில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக், உலகிற்கு மேலும் பெரும் ஒற்றுமை ஆற்றலை ஊட்டியுள்ளது.

உண்மையான பலதரப்புவாதத்தை கடைப்பிடித்து, அமைதி, ஒற்றுமை, திறப்பு மற்றும் ஒத்துழைப்பு படைத்த கோட்பாட்டைப் பின்பற்றும் சீனா, எப்போதுமே மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகத்தை உருவாக்கும் நெடுநோக்கு பார்வையுடன், மாறி வரும் உலகிற்கு நிலைத்தன்மை மற்றும் நேர்மறை ஆற்றலை வழங்கி வருகிறது. இது ஒரு பெரிய நாட்டின் பொறுப்பை வெளிக்காட்டியுள்ளது.