சீன ஜனநாயக வளர்ச்சி
2022-03-08 19:08:12

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டுக் கூட்டத் தொடர்கள், சீன ஜனநாயகத்தின் தரத்தை வெளிநாடுகள் கவனிக்கும் ஒரு முக்கிய ஜன்னலாகத் திகழ்கின்றன. இவ்வாண்டில் மேற்கொள்ளப்பட்ட கொள்கை முடிவுகள், சீன மக்களின் எண்ணங்களை முன்பு போலவே பிரதிபலிக்கும் என்று பிரிட்டனின் எழுத்தாளர் மற்றும் அரசியல் விமர்சகர் கார்லோஸ் மார்டினெஸ் கருத்து தெரிவித்தார்.

சீனாவில் முழு நடைமுறையிலான மக்கள் ஜனநாயகத்தின் கருத்து, தேர்தல்கள், ஆலோசனைகள், கொள்கை முடிவுகள், மேலாண்மை, கண்காணிப்பு முதலிய தேசிய நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களில் இயங்குகிறது.

தேர்தலின் மூலம், சீனாவின் ஐந்து நிலை மக்கள் பேரவைப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கொள்கை வகுப்பதைப் பார்த்தால், இவ்வாண்டின் ஜனவரி வரை, 132 வரைவுச் சட்டங்கள் மற்றும் ஆண்டு சட்டமியற்றல் திட்டங்களுக்காக 11 ஆயிரத்து 360க்கும் மேற்பட்ட கருத்துக்கள் அடி மட்ட சட்டமியற்றல் தொடர்பு நிறுவனங்களின் மூலம் கேட்கப்பட்டுள்ளன.

உலகில் மிகச் சிறப்பான ஜனநாயகம் கிடைக்காது. ஆனால், மேலும் சிறப்பான ஜனநாயகத்தை அனுப்பவிக்கப் பாடுபடலாம். சீனாவில் ஜனநாயகப் பாதை மென்மேலும் விரிவாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது