உயிரியல் ஆய்வகத் தகவல்களை அமெரிக்கா அவசரமாக நீக்குவதற்கான உண்மைக் காரணம் என்ன?
2022-03-09 21:34:19

அமெரிக்காவின் நிதி ஆதரவுடன் உக்ரைனில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ உயிரியல் திட்டத்தைக் கண்டறிந்ததாக ரஷிய பாதுகாப்பமைச்சகம் அண்மையில் தெரிவித்துள்ளது. மேலும் பிப்ரவரி திங்களின் இறுதியில், உக்ரைனிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தனது இணையத்தளத்தில் இருந்த அமெரிக்க உயிரியல் ஆய்வகம் தொடர்பான ஆவணங்களை அவசரமாக நீக்கியது. இத்தகைய செயல் பரந்தளவில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அமெரிக்க எதற்கு அஞ்சுகின்றது?

கடந்த பல ஆண்டுகளாக, உலகின் 30 நாடுகளிலுள்ள 336 உயிரியல் ஆய்வகங்களை அமெரிக்கா கட்டுப்படுத்தி வருகிறது. அமைதி நோக்கிற்காக இயங்கும் இந்த ஆய்வகங்கள் இருக்கின்ற உள்ளூர் சுகாதார வாரியங்களக்கும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் இடையில் ஏன் தொடர்பு இருக்கு?

மேலும், ரஷிய பொது நோய் தடுப்புப் பிரிவின் மருத்துவர் ஆன்னா பொப்போவா முன்பு கூறுகையில், மத்திய ஆசியாவில் புதிய தொற்று நோய்கள் தோன்றிய இடங்கள், வெளிநாடுகளில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டு ஏற்படுத்தும் உரியியல் ஆய்வகங்கள் இருக்கும் இடங்களுடன் அதிகளவில் இணக்கமாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.