அமைதிப் பேச்சுவார்த்தைக்கு சீனா ஆதரவு
2022-03-09 19:21:53

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸ் அரசுத் தலைவர் மற்றும் ஜெர்மனி தலைமையமைச்சருடனான காணொளி மாநாட்டில் கூறுகையில், ஐரோப்பிய கண்டத்தில் மீண்டும் போர் ஏற்பட்டுள்ளதற்கு சீனா வருந்துகிறது. ரஷியாவும் உக்ரைனும் இன்னல்கலைச் சமாளித்து, பேச்சுவார்த்தை மூலம் பயனுள்ள முடிவை எட்டி, அமைதியை நனவாக்குவதற்கு சீனா ஆதரவு அளிக்கிறது. பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் மக்கள், ஐரோப்பிய சொந்த நலன்களின் அடிப்படையில், சரிசமம், பயன், தொடர்ச்சி முதலியவை கொண்ட ஐரோப்பிய பாதுகாப்புக் கட்டுக்கோட்பை ஏற்படுத்துவதற்கு சீனா ஆதரவு அளிக்கிறது. ஐரோப்பா, ரஷியா, அமெரிக்கா, நேட்டோ உள்ளிட்ட தரப்புகள் சமமான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

தற்போது, இலட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்று வரும் நிலையில், ஐரோப்பாவில் புவியமைவு அரசியல் அபாயம் தீவிரமாகி வருகிறது. இதைத் தவிர, ரஷியாவின் மீது, மேலை நாடுகள் மேற்கொண்டு வரும் தடை நடவடிக்கைகள், கடினமாக மீட்சி பெற்று வரும் உலகப் பொருளாதாரத்துக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.