ரஷியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
2022-03-10 20:41:50

ரஷியாவிடமிருந்து எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான தடை செய்யும் சட்ட முன்மொழிவு அமெரிக்காவின் பிரதிநிதிகள் அவையில் 9ஆம் நாள், நிறைவேற்றப்பட்டது. இத்தடை ரஷியா மீது என்று பொருள் கொள்வதை விட ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதானது என்று ஐரோப்பிய இணையவாசிகள் தெரிவித்தனர்.

அண்மையில், எரியாற்றல் விலை உயர்ந்து வருவது குறித்து ஐரோப்பாவில் உள்ள மக்கள் புகார் செய்து வருகின்றனர். ரஷியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அமெரிக்கா சார்ந்திருக்கவில்லை, ஆனால் ஐரோப்பாவுக்கு அவற்றின் தேவை உள்ளது என்று பிரான்ஸ் அரசுத் தலைவர் மெக்ரோன் தெரிவித்தார்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் பிரச்சினைகளைத் தீர்க்காது. மாறாக, இரு தரப்புகளின் பொருளாதாரத்துக்கும் இழப்பைக் கொண்டு வரும் அது, மட்டுமல்லாமல், பிரச்சினையின் அரசியல் மூல தீர்வுக்கும் பாதிக்கும் என்பதை உண்மைகள் நிரூபித்துள்ளன.