உலகில் இன்னும் வேதியியல் ஆயுதங்களை வைத்திருக்கும் ஓரே ஒரு நாடான அமெரிக்கா
2022-03-11 20:26:18

போர்களால் விஷக் கிருமிகள் கசிவதைத் தவிர்க்கும் வகையில், அண்மையில், நாட்டின் பொது சுகாதார ஆய்வகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அதிக ஆபத்து வாய்ந்த நோய்க்கிருமிகளை அழிக்க வேண்டும் என்று உக்ரைனுக்கு உலகச் சுகாதார அமைப்பு யோசனை தெரிவித்தது.

ரஷிய தரப்பால் பெறப்பட்ட ஆவணங்களின் படி, உக்ரைனில் பத்துக்கும் மேற்பட்ட உயிரியல் ஆய்வகங்கள், அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பின் உத்தரவின் பேரில் இயங்கி வருகின்றன. அவற்றில் 20 கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்க டாலரை அமெரிக்கா முதலீடு செய்துள்ளது.

உக்ரேனிய ஆய்வகங்களில் வவ்வால்களை உயிரியல் ஆயுதத்தாங்கிகளாகப் பயன்படுத்தும் திட்டத்தையும் அமெரிக்கா மேற்கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டது.

உலகில் இன்னும் வேதியியல் ஆயுதங்களை வைத்திருக்கும் ஓரே ஒரு நாடான அமெரிக்கா, கடந்த 20 ஆண்டுகளாக, வேதியியல் ஆயுத பொது ஒப்பந்தம் பற்றிய பலதரப்பு சரிபார்ப்பு அமைப்புமுறையை உருவாக்குவதை தனியாக எதிர்க்கிறது. இது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.