© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சிறு தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமையுடன் வரியைத் திருப்பி வழங்குவது, கிராமப்புறங்களிலும் தொலைத்தூரப் பகுதிகளிலும் கட்டாய கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது, அரசுத் துறைகள் தனதுச் செலவுகளைக் கண்டிப்பான முறையில் கட்டுப்படுத்துவது, தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவை அதிகரிப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடர் நிறைவுபெற்ற பிறகு சீனத் தமைலமை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் விவரித்தார். ஆண்டுதோறும், சீனத் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத்தில் மக்களின் வாழ்வாதாரம் பற்றிய பல கொள்கைகளை வெளியிடுவது வழக்கம்.
தொழில் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கு நன்மைகளைக் கொண்டு வரும் கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கு மேலதிக நிதி செலவு தேவைப்படும். இதற்காக, இவ்வாண்டு சீனாவின் நிதிச் செலவு, கடந்த ஆண்டை விட 2லட்சம் கோடி யுவான் அதிகமாகும். அரசுத் துறைகள் தனதுச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், பொது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று ஆண்டுக் கூட்டத் தொடர்களில் பிரதிநிதிகளும் உறுப்பினர்களும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர்.
இந்தக் கோணத்தில் பார்த்தால், சீன அரசு உலகின் மிக அதிக ஆதரவு விகிதம் பெறுவது ஏன் என்பதை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். 2021ஆம் ஆண்டு, சீன மக்கள் அரசாங்கம் மீது காட்டிய நம்பிக்கை விகிதம், 9விழுக்காடு அதிகரித்து, 91விழுக்காட்டை எட்டியது. இந்த நம்பிக்கை விகிதம் தொடர்ந்து உலகின் முதலிடம் வகித்ததோடு, கடந்த 10 ஆண்டுகளில் புதிய உச்சத்தையும் எட்டியது குறிப்பிடத்தக்கது. உலகளாவிய மக்கள் தொடர்பு ஆலோசனை நிறுவனமான எடெல்மேன் இவ்வாண்டின் தொடக்கத்தில் வெளியிட்ட ஆய்வு அறிக்கை ஒன்றில் இது சுட்டிக்காட்டப்பட்டது. சீனாவுக்கான வெளிநாட்டுத் தூதர் ஒருவரின் கருத்து போல, சீனாவில் மக்களே முதன்மை என்ற ஆட்சிமுறையில், பொது மக்களின் நலன்களைக் குறித்து முடிவு எடுக்கப்படும்.