ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் அற்புதமானது என்ற வாக்குறுதியை நிறைவேற்றியது சீனா
2022-03-14 20:59:28

ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் ஆகிய இரண்டும் அற்புதமாக இருக்கும் என்ற வாக்குறுதியை சீனா நிறைவேற்றியுள்ளது. குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் முன்மாதிரியை சீனா  உருவாக்கியுள்ளது என்று சர்வதேச பாராலிம்பிக் கமிட்டித் தலைவர் ஆன்ட்ரூ பார்சன்ஸ் 13ஆம் நாள் பாராட்டினார்.

9 நாட்களில், உலகின் 46 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 600 மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு வீரர்கள், போட்டிகளில் பங்கெடுத்து தங்களைத் தாங்களே விஞ்சி, சாதனையை படைத்ததோடு, உலகிற்கு நம்பிக்கை மற்றும் சக்தியை வழங்கியுள்ளது.

தற்போது, உலக மக்கள் தொகையில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 15விழுக்காடு வகிக்கிறது. அவர்கள், மனிதகுலத்தின் குடும்பத்தில் சமத்துவமான உறுப்பினர்களே. உலகின் நிலையான வளர்ச்சியில், அனைவரையும் உள்ளடக்க வேண்டியது அவசியமானது. மக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு உற்சாகம் தந்துள்ள பெய்ஜிங் பாராலிம்பிக்,  சீன மனித உரிமைப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த விளையாட்டுப் போட்டி, உலகிற்கு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டுகிறது.