இரு நாட்டுத் தலைவர்களின் வாக்குறுதிகளை அமெரிக்கா நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்
2022-03-15 19:56:59

சீனா மற்றும் அமெரிக்கா இடையே உயர்மட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை மார்ச் 14ஆம் நாள் இத்தாலித் தலைநகர் ரோமில் நடைபெற்றது.  அதில்  சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரான யாங் ஜியேச்சீயும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவனும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  சீன-அமெரிக்க உறவு,  சர்வதேசத்தில் சூடான பிரச்சினை உள்ளிட்டவை குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதோடு,  இரு  நாட்டுத் தலைவர்கள் எட்டிய ஒருமித்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கடந்த நவம்பரில் சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்கள்  காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்திய பிறகு  இரு நாட்டு உயர்மட்ட அதிகாரிகள் நேரடியாக களத்தில் சந்திப்பது இதுவே முதன்முறையாகும். இரு நாட்டுத் தலைவர்களின் ஒருமித்த கருத்துக்களை நடைமுறைப்படுத்துவது , சீன- அமெரிக்க உறவில் மிக முக்கியமான கடமையாகும்.

இப்பேச்சுவார்த்தையில்,  தைவான், சின்ஜியாங், திபெத் மற்றும் ஹாங்காங் தொடர்பான விவகாரங்கள் குறித்து சீனா மீண்டும் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.  சீனாவின் உள்விவகாரங்களில் பகுதியாக இருக்கும்  இவ்விவகாரங்கள் சீனாவின் மைய நலன்களுடன் தொடர்புடைவை. வெளிப்புறச் சக்தி இதில் தலையிட சீனா அனுமதிக்காது.

ஒரே சீனா என்ற கோட்பாடு, சீன-அமெரிக்க உறவின் அரசியல் ரீதியிலான அடிப்படையாகும்.  அமெரிக்காவின் நடப்பு அரசங்கம்,  ஒரே சீனா என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதாகவும் தைவான் சுதந்திரத்தை ஆதரிக்காததாகவும் பலமுறை வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், அமெரிக்கா வாக்குறுதியை மீறுதல்,  தைவான் நீரிணையிலுள்ள அமைதிச் சூழலைச் சீர்குலைத்துள்ளது என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.