அகதிகள் பிரச்சினையில் இரட்டை நிலைப்பாடு எடுத்து ஆணவத்தைக் காட்டுகிறது மேற்கத்திய நாடுகள்
2022-03-16 21:10:28

சிரியாவில் நடத்தப்பட்ட இனப்படுகொலையை உலகம் கண்டுள்ளது. பல மேற்கத்திய நாடுகள் அதில் பங்கெடுத்தன. ஆனால், உக்ரைனில், மேற்கத்திய நாடுகள் அந்நாட்டு மக்களைப் பாதுகாக்கிறது என்று சிரிய பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் அனஸ் அல்-அப்தா செய்தி ஊடகத்துக்குப் பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். மேற்கத்திய நாடுகள் இத்தகைய இரட்டை நிலைப்பாடு எடுப்பதில் கோபம் மற்றும் ஏமாற்றம் அடைவதாகவும் அவர் கூறினார்.

மார்ச் 15ஆம் நாள், சிரியா நெருக்கடி நிகழ்ந்ததன் 11 ஆண்டுகள் நிறைவு நாள் ஆகும். அப்போது, ஐ.நா. பொதுச் செயலாளர் குட்ரேஸ் பேசுகையில்,  பல்வேறு தரப்புகள் நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு, சிரிய மக்களின் 11 ஆண்டுக்கால துன்பத்தை  முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், இந்த வேண்டுகோள், மேற்கத்திய நாடுகளிடம் அதிக கவனத்தை ஈர்க்கவில்லை. இதனால், மக்களிடையே குழப்பம் ஏற்படுகிறது. அதாவது, சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அப்பாவி மக்களின் உயிரிழப்பை ஏற்படுத்தி, மனிதநேய நெருக்கடியை உருவாக்கியபோது, மேற்கத்திய நாடுகளின் செய்தி ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கோபத்தைக் காட்டவில்லை ஏன்? உக்ரைன் பற்றி பேசுகையில், அவர்கள் மனிநேயம் என்ற பெயரில் விறுவிறுப்பாக விவாதிக்கின்றனர்  ஐரோப்பிய  நாடாளுமன்றத்தின் உறுப்பினர் க்ளைர் தேலீயின் கருத்தைப் போல, ஆப்கானிஸ்தான் இன்றி,  உக்ரைன் பற்றி மட்டும் விவாதிப்பதற்கு காரணமானது, ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த நாடு அமெரிக்கா தான்.

உண்மையில், ஆப்கானிஸ்தான் போர், சிரியா போர், உக்ரைன் நெருக்கடி ஆகியவற்றில், அமெரிக்காவின் கௌரவமற்ற பங்களிப்பு உண்டு. யாருக்கு அக்கறை செலுத்துவது, யாருக்கு அக்கறை செலுத்தாது ஆகியவற்றில்,  செய்தி ஊடகங்கள்  மற்றும் அமெரிக்க அரசியல்வாதிகள் ஒருங்கிணைந்து முடிவெடுத்துள்ளனர். அவர்களின் பார்வையில்,  மத்திய கிழக்கு அகதிகளோ அல்லது உக்ரைன் அகதிகளோ,  அரசியல் நலன்களை பெற்று, அமெரிக்காவின் பேராதிக்கத்தைக் காப்பத்துவதற்கான கருவியாகக் கருதப்படுகிறது.