மீட்சியுற்ற சீனப் பொருளாதாரம்
2022-03-17 19:24:46

தற்போது சீனப் பொருளாதாரம் நிலையாக மீட்சியுற்று வருகிறது. அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டின் முதல் இரண்டு மாதங்களில் சீனப் பொருளாதாரத்தின் மீட்சி மதிப்பீட்டை விட, நன்றாக உள்ளது. முழு ஆண்டின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி இலக்கின் நனவாக்கத்துக்கு நல்ல அடிப்படை உருவாக்கியுள்ளது. தொற்று நோய் பரவல் இருந்த நிலையில், சீனப் பொருளாதாரம் இவ்வாண்டின் துவக்கத்தை உயிராற்றலுடன் ஆரம்பித்துள்ளது என்று ப்ளூம்பெர்க் நியூஸ் செய்தி நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் சீன நுகர்வுத் துறை பெரும் மீட்சியுற்றுள்ளது. நுகர்வுப் பொருட்களின் சில்லறை விற்பனை

மொத்த தொகை 2021ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 6.7விழுக்காடு அதிகமாகும். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த பொருளியலாளர்களின் மதிப்பீட்டை விட, 3விழுக்காடு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. நுகர்வுத் துறையின் மீட்சி சீனப் பொருளாதாரத்துக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தற்போது உலகளாவிய தொற்று நோய் பரவல் இன்னும் நிலவுகிறது. உலக நிலைமையும் பதற்றமாக இருக்கிறது. சீனப் பொருளாதாரம் தொடர்ச்சியாக மீட்சியுறுவதற்கான அடிப்படை இன்னும் வலுவானதாக இல்லை. உள்நாடு மற்றும் உலகளாவிய பல உறுதியற்றத் தன்மையை எதிர்கொண்டு, சீனா கொள்கைகளின் ரீதியில் நன்கு யோசிக்க வேண்டும். சந்தைக்குச் சாதகமாக இருக்கும் கொள்கைகளை ஆக்கப்பூர்வமாக வெளியிட வேண்டும். இறுக்க கொள்கையின் வெளியீட்டைக் கவனம் செலுத்த வேண்டும். நிதி நிறுவனங்கள், பொருளாதாரத்துக்கு உறுதியாக ஆதரவளிக்க வேண்டும் என்று 16ஆம் நாள் நடைபெற்ற சீன அரசவையின் நிதித் துறை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.