உலகிற்கு அமெரிக்கா நல்லெண்ணத்தைக் காட்ட வேண்டும்
2022-03-19 19:08:01

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 18ஆம் நாள் அமெரிக்க அரசுத் தலைவருடன் காணொளி வழியில் உரையாடிய போது, இருநாட்டுறவு சீரான திசையில் முன்னேற வழிகாட்டியதோடு, சர்வதேச பொறுப்புளை ஏற்று உலகின் அமைதிக்குப் பங்காற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

ரஷியா-உக்ரைன் இடையே நேட்டோவின் தூண்டுதலால் மூண்ட இராணுவ மோதல் தொடர்கிறது. உக்ரைன் நெருக்கடிக்கு காரணமான அமெரிக்கா தனது பொறுப்பைப் புறக்கணித்து, சுய நலனுக்காக மற்ற தரப்புக்கு முரண்பாட்டைக் கொடுப்பதால், சீன-அமெரிக்க உறவுக்கும் உலக அமைதிக்கும் மேலதிக அறைகூவல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இருநாட்டு அரசுத் தலைவர்கள் நடத்திய காணொளி பேச்சுவார்த்தை, இருநாடுகளுக்கும் உலகிற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.

நிலைமை தீவிரமாவதைத் தவிர்க்கும் விதம் சீனாவுடன் தொடர்பு கொள்ள விரும்புவதாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா தனது கூற்றுக்கிணங்க செயல்பட்டு, நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் இருநாட்டு அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள பொதுக் கருத்துக்களையும் பைடனின் அரசியல் வாக்குறுதியையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என விரும்புகிறோம்.