உக்ரேனுக்கு ஆயுதங்கள் தேவையா?
2022-03-22 14:05:25

ரஷிய-உக்ரைன் மோதல் துவங்கியதற்கு முன்பும் பின்பும், சில அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் சீனாவுக்கு எதிராக தொடர்ந்து பொய்யான செய்திகளை பரப்பி வந்தன.

அதைப் போல் 19 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்கா வதந்தியைப் பரப்பிய பிறகு, ஈராக்கை ஆக்கிரமித்தது. தற்போது, உக்ரைன் பிரச்சினையைப் பயன்படுத்தி சீனாவுக்கு எதிரான தவறான தகவல்களைப் புனைந்து, சீனாவைப் பழிவாங்குவது மற்றும் சீன-ரஷிய உறவுகளைப் பிளவுபடுத்துவது அமெரிக்காவின் நோக்கமாகும்.

உக்ரைன் நெருக்கடி ஏற்பட்ட பிறகு, பேச்சுவார்த்தையின் மூலம் இப்பிரச்சினையைத் தீர்க்கச் சீனா பாடுபட்டு வருகின்றது. உக்ரேனுக்குப் பல தொகுதியான மனித நேய உதவிகளைச் சீனா வழங்கியுள்ளது. ஆனால், ரஷியாவிற்கு எதிராக பன்முக பொருளாதாரத் தடைகளைத் விதிப்பதுடன், உக்ரைனுக்குப் பெரும் அளவிலான ராணுவ உதவிகளை வழங்க மேற்கத்திய நாடுகளை அமெரிக்கா இடைவிடாமல் திரட்டி வருகிறது. இது நெருக்கடியின் தீர்வுக்குப் பயன் தர முடியாது மட்டுமல்லாமல் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது.