ரஷிய-உக்ரைன் போதலில்‘எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினாற் போல’ செயல்பட்டுள்ள அமெரிக்க அரசியல்வாதிகள்
2022-03-25 11:48:09

மார்ச் 24ஆம் நாள் வரை, ரஷியா- உக்ரைன் இடையேயான மோதல் மூண்டு ஒரு மாதம் ஆகி விட்டது. அமெரிக்க அரசியல் அறிஞர் ஜான் ஜோஸ்ப் மீர்ஷேமர், தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் மத்தமேலா  சிரில் ரமபோசா உள்பட அதிகமான பன்னாட்டு பிரமுகர்கள் பேசுகையில், நேட்டோ பல ஆண்டுகளாக கிழக்கு நோக்கி விரிவாக்கிக் கொண்டே வருவதால், ரஷியா-உக்ரான் இடையே பதற்றம் ஏற்பட்டது. மேற்கத்திய நாடுகள்  குறிப்பாக அமெரிக்கா, இந்தப் பேரிடருக்கு முக்கிய பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

அதிகமாக எழுந்துள்ள விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினாற் போல அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.  அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனின் ஐரோப்பிய பயணத்தில், புதிய தடைகள் உள்பட ரஷியாவுக்கு எதிரான பல புதிய நடவடிக்கைகள் உறுதி செய்யப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தற்போது, ரஷியா- உக்ரைன் இடையே மோதல் ஒரு மாதம் நீடித்துள்ளது. போரில் சிக்கியுள்ள உக்ரைன் மக்கள் மற்றும் தடையால் பாதிக்கப்பட்ட ரஷிய மக்களுக்கு மத்தியில், அமெரிக்கா தனது பொறுப்புகளை தட்டிக் கழிக்க முடியாது. நிலைமை தீவிரமாகாமல் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்காவின் அதிகாரி முன்பு தெரிவித்தார். அதைப்போல, சொல்லும் செயலும் ஒன்றாய் இருக்க வேண்டும். நிலைமையைத் தீவிரமாக்கும் செயலுக்குப் பதிலாக, அமெரிக்க தரப்பு நடைமுறை நடவடிக்கைகளை எடுத்து,  ரஷியா மற்றும் உக்ரைன் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.