அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான கருத்து வேற்றுமை
2022-03-28 20:35:47

அமெரிக்க அரசுத் தலைவர் பைடன் மூன்று நாட்கள் நீடித்த ஐரோப்பா பயணத்தை முடித்துக்கொண்டு வாஷிங்டன் திரும்பினார். இப்பயணத்தில் பொருளாதாரத் தடைகளையும் ஆயுத விநியோகத்தையும் அதிகரிப்பதைத் தவிர, உக்ரைன் நெருக்கடியை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்து பைடென் எந்த உறுதியான பதில்களையும் அளிக்கவில்லை.

அதே வேளையில், தூதாண்மை வழியின் மூலம், போர் நிறுத்தம் மற்றும் படை விலகலை நனவாக்குவது பிரான்ஸின் இலக்காகும் என்று பிரான்ஸ் அரசுத் தலைவர் மக்ரோன் வலியுறுத்தினார். ரஷிய-உக்ரைன் மோதலில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான கருத்து வேற்றுமையை இது காட்டுகின்றது.

அண்மையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டுறவுப் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தும் செயல் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்குழு ஏற்றுக் கொண்டுள்ளது. ஐரோப்பாவைப் பொறுத்தவரை, உண்மையான பாதுகாப்பு என்பது கிழக்கு மற்றும் மேற்கு இடையே மோதலுக்கான எல்லை கோட்டை மீண்டும் வரையதைச் சார்ந்திருக்க மாட்டாது.