ஆப்கானிஸ்தான் மக்களை இன்னல் நிலையில் இருந்து மீட்க உதவி வரும் சீனா
2022-03-29 20:16:40

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, அன்ஹுய் மாநிலத்தில் 3ஆவது ஆப்கானிஸ்தான் அண்டை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துக்குத் தலைமை தாங்கவுள்ளார். ஆப்கானிஸ்தானின் அமைதி புனரமைப்புக்குச் சீனா ஆக்கப்பூர்வமாக முயற்சி செய்வதை இச்செயல் காட்டுகின்றது.

கடந்த ஆண்டின் ஆகஸ்டு திங்களில், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா படையை அவசரமாக வெளியேற்றிய பிறகு, ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு கால போர் முடிவடைந்தது. அந்நாடு குழப்பத்தில் இருந்து இயல்பான நிர்வாகத்துக்குத் திரும்பி வருகின்றது.

ஆப்கானிஸ்தானுக்கு 5 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள உணவு, மருந்து, குளிர்கால பொருட்கள் முதலிய உதவிகளைச் சீனா வழங்கி, நடைமுறை நடவடிக்கையின் மூலம் ஆப்கானிஸ்தான் மக்களை இன்னல் நிலையில் இருந்து மீட்க உதவுகிறது.

ஆப்கானிஸ்தான் மக்களே தங்கள் நாட்டின் தலைவிதியைச் சுதந்திரமாகத் தீர்மானிக்க வேண்டும். தனிப்பட்ட லாபத்துக்காக எந்தவொரு வெளி சக்தியும் ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்த முடியாது என்று அண்டை நாடான சீனா கருத்து தெரிவித்தது.