ரஷிய-உக்ரைன் நிலைமையைத் தீவிரமாக்கும் செயலை அமெரிக்கா நிறுத்த வேண்டும்
2022-03-31 14:16:35

ரஷியா-உக்ரைன் இடையே 5ஆவது சுற்று பேச்சுவார்த்தை 29ஆம் நாள் துருக்கியில் நிறைவுற்றது. இதுவரை பெரிய முன்னேற்றம் காணப்பட்ட பேச்சுவார்த்தை இதுவாகும் என்று துருக்கி வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.

தகவல்களின்படி, நடப்பு பேச்சுவார்த்தையில், உக்ரைன் இராணுவக் கூட்டணியில் சேராமல் நிரந்தர நடுநிலையில் இருப்பது, ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் சேர்வதை ரஷியா எதிர்க்காமல் உக்ரைனுடன் மோதலைக் குறைக்கும் நடவடிக்கையை எடுப்பது உள்ளிட்ட முன்னேற்றங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், இருநாட்டு அரசுத் தலைவர்கள் சந்திப்பு நடத்த வாய்ப்புள்ளது.

இத்தகைய முன்னேற்றங்களால், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் முக்கிய பங்கு குறியீடுகள் பெருமளவில் உயர்ந்தன. ரஷிய-உக்ரைன் நிலைமை மேம்படுவதை சர்வதேச சமூகம் வரவேற்கிறது என்பதை இது காட்டுகிறது. ஆனால் உக்ரைன் நெடுக்கடிக்கு காரணமான அமெரிக்கா பராமுக மனப்பான்மையுடன் இதனை வரவேற்காத நிலையில் உள்ளது. அதோடு, ரஷிய பொருளாதாரத்தில் முக்கியமான பல தொழில்களின் மீது புதிய தடை நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்கா மற்றும் தனது கூட்டணி நாடுகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க துணை நிதி அமைச்சர் கூறினார்.

ரஷியா மீதான தடை நடவடிக்கையை அதிகரிப்பதோடு, உக்ரைனுக்குத் தொடர்ந்து ஆயுதங்களை வழங்குவது, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயலாகும். ரஷியாவைத் தடுத்து, ஐரோப்பா மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்துவது, இம்மோதலிலிருந்து மிகப் பெரிய நலன்களைப் பெற்றுள்ள அமெரிக்காவின் நோக்கமாகும். உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமெரிக்கா திகழ்கிறது என்பதை இது காட்டுகிறது. போரைத் தூண்டி விடும் அமெரிக்கா தனது தவறான செயலை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் தக்க தண்டனை அதற்குக் கிடைக்கும்.