ஆப்கானிஸ்தானின் இனிமையான எதிர்காலத்துக்கான முயற்சிகள்
2022-04-01 17:43:41

அமைதி, நிதானம், வளர்ச்சி, செழுமை ஆகியவை ஆப்கானிஸ்தான் மக்களின் எதிர்ப்பார்ப்புகளாகும். பிராந்திய நாடுகள் மற்றும் சர்வதேசச் சமூகத்தின் பொது நலன்களுக்கும் பொருந்தியதாகும் என்று ஆப்கானிஸ்தானின் அண்டை நாட்டு வெளியுறவு அமைச்சர்களுக்கிடை 3ஆவது கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் தெரிவித்தார். இக்கூட்டத்தில் 8 பொது கருத்துகளும், ஆப்கான் பொருளாதாரத்தின் புனரமைப்பு மற்றும் பயனுள்ள ஒத்துழைப்புக்கான பல முன்மொழிவுகளும் எட்டப்பட்டன. ஆப்கானிஸ்தானின் அமைதிக்குத் திட்டங்களை வழங்கி, அந்நாட்டு மக்களின் வாழ்க்கை மேம்பாடு மற்றும் மனித உரிமை பாதுகாப்புக்கு இவை சரியான திசையைச் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும், ஆப்கான் புனரமைப்புக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும், அமெரிக்கா ஆப்கானிஸ்தானின் சொத்துக்களைத் திரும்பி கொடுத்து, நியாயமற்ற தடைகளை நீக்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்தியது.

இதனிடையில், தனக்கும் ஐ.எஸ், கிழக்கு துருக்கிய இஸ்லாமிய இயக்கம் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே ஆப்கானிஸ்தான் தெளிவான வேறுபாட்டை வரைய வேண்டும் என்றும் அதன் அண்டை நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.