அவசரகால எண்ணெய் கையிருப்பு விடுவிக்கும் திட்டம்
2022-04-01 17:25:02

தற்போது எண்ணெய் தட்டுப்பாடு, விலை உயர்வு ஆகியவை கொண்ட நிலையைச் சமாளிக்கும் வகையில், வரும் 6 திங்களில் தனது அவசரகால எண்ணெய் கையிருப்பிலிருந்து தினமும் 10 இலட்சம் பீப்பாய்களை, மொத்தமாக 18 கோடி பீப்பாய் எண்ணெயை அமெரிக்கா விடுவிக்கும் என்று அந்நாட்டு அரசுத் தலைவர் ஜோ பைடன் மார்ச் 31ஆம் நாள் அறிவித்தார். இது, அமெரிக்க வரலாற்றில், மிகப்பெரிய எண்ணெய் இருப்பு விடுவிப்பு அளவு என்று தெரிவிக்கப்பட்டது.

எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு, அமெரிக்க தொடர்புடைய தொழில் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்த பைடன், குறிப்பிட்ட சில நிறுவனங்கள், தற்போதைய நிலைமையைப் பயன்படுத்தி பெரும் தொகையை இலாபமாக ஈட்டியுள்ளன என்று குற்றஞ்சாட்டினார். கடந்த அரை ஆண்டில் அவசரகால எண்ணெய் கையிருப்பை அமெரிக்கா விடுவிப்பது, இது மூன்றாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.