உக்ரைன் விவகாரம் பற்றிய சீனாவின் நிலைப்பாடுகள்
2022-04-01 17:31:25

ஆப்கானிஸ்தானின் அண்டை நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் 3வது கூட்டத்துக்கு சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மார்ச் 31ஆம் நாள் தலைமைத் தாங்கினார். இதற்குப் பிறகு நடத்தப்பட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் அமைதியான புனரமைப்புக்கு ஆண்டை நாடுகள் ஆதரவு அளித்து, எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தானின் சீரான வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்றார்.

உக்ரைன் விவகாரம் குறித்து சீனாவின் நிலைப்பாடுகளை அவர் விவரித்தார். முதலாவதாக, அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னேற்றும் சரியான திசையில் ஊன்றி நிற்க வேண்டும். இரண்டாவதாக, சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாடுகளைப் பேணிக்காப்பதில் ஊன்றி நிற்க வேண்டும். மூன்றாவதாக, பனிப் போர் சிந்தனையைத் தவிர்ப்பதில் ஊன்றி நிற்க வேண்டும். நான்காவதாக, பல்வேறு நாடுகளின் உரிய நலன்களைப் பேணிக்காப்பதில் ஊன்றி நிற்க வேண்டும். ஐந்தாவதாக, ஆசிய-பசிபிக் பிரதேச அமைதி மற்றும் நிலைப்புத் தன்மையை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.